UPI: இன்றைய டிஜிட்டல் சகாப்தத்தில், UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) வெறும் பணப் பரிவர்த்தனைக்கான வழிமுறையாக மட்டுமல்லாமல், வருமான ஆதாரமாகவும் மாறியுள்ளது. ஆம், உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால், இந்த சில புத்திசாலித்தனமான வழிகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றின் மூலம் UPI செயலியை பரிவர்த்தனைகளுக்கு மட்டுமல்ல, பணம் சம்பாதிக்கவும் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். UPI மூலம் பணம் சம்பாதிப்பதற்கான 100% சட்டப்பூர்வ வழிகளை பாற்றி இங்கே காணலாம்.
கேஷ்பேக் மூலம் பணம் சம்பாதிக்கலாம்
PhonePe, Paytm, Google Pay மற்றும் Amazon Pay போன்ற யுபிஐ செயலிகளில், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ்பேக் அல்லது ரிவார்டுகள் கிடைக்கும். ரீசார்ஜ், பில் கட்டணம், EMI அல்லது நண்பர்களைப் பரிந்துரைப்பதன் மூலம் ஸ்கிராட்ச் கார்டுகள் மூலமாகவும் பணம் ஈட்டலாம்.
ஆஃபர் பகுதியைப் புறக்கணிக்காதீர்கள்
ஒவ்வொரு UPI செயலியிலும் அவ்வப்போது சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் “ஆஃபர் செக்ஷன்” இருக்கும். இவற்றைத் தொடர்ந்து செக் செய்யவும். மின் கட்டணம் அல்லது இது போன்ற கட்டணங்களை செலுத்தும் போது, ரூ.50 போன்ற போனஸ் தொகை கிடைக்கக்கூடும்.
UPI மூலம் பணம் பெற உதவும் சிறப்பு டாஸ்குகள்
கட்டுரைகளைப் படிப்பது, வீடியோக்களைப் பார்ப்பது அல்லது விளையாட்டு விளையாடுவது போன்ற எளிய பணிகளுக்கு வெகுமதிகளை வழங்கும் பல செயலிகள் உள்ளன. உதாரணமாக, Roz Dhan, TaskBucks போன்ற தளங்களில், UPI மூலம் நேரடி கட்டணம் கிடைக்கிறது. மீஷோ போன்ற செயலிகள் மூலமும் பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம்.
வீட்டிலிருந்தே ஃப்ரீலான்சிங் செய்து சம்பாதிக்கலாம்
எழுதுவதில் நாட்டம் உள்ளதா? கிராஃபிக் டிசைனிங் அல்லது வெப் டிசைனிங்கில் ஆர்வம் உள்ளதா? அப்படியென்றால் Fiverr, Upwork, Freelancer போன்ற வலைத்தளங்களில் பணிபுரிந்து வீட்டிலிருந்தே எளிதாக பணம் சம்பாதிக்கலாம். எந்த தொந்தரவும் இல்லாமல் UPI வழியாக பணம் நேரடியாக உங்கள் கணக்கில் வந்து சேரும்.
ரெஃபர் செய்து சம்பாதிக்கலாம்
Groww, Upstox, CRED, Zerodha போன்ற தளங்கள் ஒவ்வொரு பரிந்துரைக்கும் ரூ.50 முதல் ரூ.500 வரையிலான பலன்களை உங்களுக்கு வழங்குகின்றன. உங்கள் பரிந்துரை இணைப்பைப் பகிர்ந்தால் போதும், மற்றவர் பதிவு செய்தவுடன் பணம் உங்கள் UPI கணக்கில் வரவு வைக்கப்படும்.
உங்கள் டிஜிட்டல் வணிகத்தைத் தொடங்குங்கள்
நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு, கலைப்பொருட்கள், உடைகள் அல்லது பரிசுப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்ய, வாட்ஸ்அப் அல்லது இன்ஸ்டாகிராமில் உங்கள் கடையைத் திறக்கலாம். பணம் செலுத்துவதற்கு UPI QR குறியீடு வசதியை வழங்க முடியும். இது மிகவும் வேகமான மற்றும் பாதுகாப்பான முறையாகும்.
இந்த முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்
RBI மற்றும் NPCI ஆல் அங்கீகரிக்கப்பட்ட UPI செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும். உங்கள் OTP, PIN அல்லது வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பண ஆசையில் பெய்ட் சர்வேக்கள் மற்றும் திட்டங்களில் ஈர்க்கப்படுவதைத் தவிர்க்கவும்.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காகவே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த வித முதலீடு அல்லது வர்த்தகம் செய்யவும் அறிவுறுத்தப்படவில்லை).