IPL 2025, GT vs MI : குவாலிஃபையர் 2 போட்டி முடிவை தீர்மானிக்கும் மும்பை, குஜராத் அணிகளின் 4 முக்கிய பிளேயர்கள்..!!

IPL 2025, GT vs MI : ஐபிஎல் 2025 தொடரின் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றான குவாலிஃபையர் 2 போட்டி இன்று நடக்கிறது. நியூ சண்டிகர் முலான்பூரில் நடக்கும் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எலிமினேட்டர் 2 போட்டிக்கு தகுதி பெறும். அதில் குவாலிஃபையர் 1ல் தோற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதும். இந்த சூழலில் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகளில் இருக்கும் முக்கியமான பிளேயர்கள் யார் என்பதை பார்க்கலாம். இந்த பிளேயர்களே இன்றைய போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். 

குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் இருந்து வலுவான அணியாக இருக்கிறது. ஐபிஎல் பிளே ஆப் சுற்றை உறுதி செய்த முதல் அணியும் குஜராத் அணி தான். காரணம் அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சம பலத்துடன் இருக்கிறது. குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சாய்சுதர்சன் உச்சக்கட்ட பார்மில் இருக்கிறார். கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இன்றைய போட்டியில் பட்லர் இருக்கமாட்டார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து விளையாடுவதால் சொந்த நாட்டு அணிக்காக விளையாட தாயகம் திரும்பிவிட்டார். அவருக்கு பதிலாக இலங்கையைச் சேர்ந்த குசல் மென்டிஸ் களமிறங்க உள்ளார். பவுலிங்கில் பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.,

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் தனியொருவராக சூர்யகுமார் யாதவ் முத்திரை பதித்து வருகிறார். இவருக்கு அடுத்தபடியாக மற்ற பிளேயர்கள் ஒவ்வொரு போட்டியில் பங்களிப்பு செய்கின்றனர். ரெக்கில்டன், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சு சூப்பராக இருக்கிறது. டிரென்ட் போல்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா கூட்டணி மும்பை அணிக்கு பெரும் பலம். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது குஜராத் அணிக்கு கடும் சவால் அளிக்கும் அணியாகவே இருக்கிறது. ஆனால் அனுபவத்தில் மும்பை அணி கொஞ்சம் முன்னிலையில் இருக்கிறது. ஐபிஎல் குவாலிஃபையர் போன்ற பெரிய போட்டிகளை எல்லாம் மும்பை இந்தியன்ஸ் பலமுறை விளையாடி வெற்றிகளை பெற்றிருக்கிறது. அதனால் அந்த அணிக்கு போட்டி நெருக்கடியை சமாளிக்கும் குஜராத் டைடன்ஸ் அணியுடன் ஒப்பிடும்போது அதிக திறன் உள்ளது.  

இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டுமே என்ற பயத்தில் குஜராத் டைட்டன்ஸ் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இந்த பயத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பார்க்கும். இருப்பினும் குஜராத் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியும் ஏற்கனவே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சவால் கொடுக்க தயாராகவே இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரு அணிகளிலும் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய பிளேயர்களாக இருப்பவர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம். 

குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் முக்கிய வீரர்கள்

குஜராத் டைட்டன்ஸ்

ஷுப்மான் கில்
பி சாய் சுதர்சன்
பிரசித் கிருஷ்ணா

மும்பை இந்தியன்ஸ்

சூர்யாகுமார் யாதவ்
ஜஸ்பிரித் பும்ரா
ட்ரெண்ட் பவுல்ட்
ஹார்டிக் பாண்ட்யா

மேலும் படிங்க: சுயாஷ், ஃபில் சால்ட் அசத்தல்.. பஞ்சாப்பை எளிதாக வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய ஆர்சிபி!

மேலும் படிங்க: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளில் மிக குறைவான ஸ்கோரை அடித்த அணிகள் எவை? பஞ்சாப் அணிக்கு எந்த இடம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.