MI vs GT, IPL 2025 : குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது. டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா, பேரிஸ்டோவ், சூர்யகுமாரின் அதிரடியால் மும்பை 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் குவித்தது. 229 ரன்கள் எடுத்தால் மட்டுமே குஜராத் அணி இப்போட்டியில் வெற்றி பெறுவதுடன் எலிமினேட்டர் 2 போட்டிக்கு முன்னேறும்.
குஜராத் மோசமான பீல்டிங்
குஜராத் டைட்டன்ஸ் அணி இப்போட்டியில் மோசமாக பீல்டிங் செய்தது. போட்டி தொடங்கியது முதல் சில ஓவர்களிலேயே அடுத்தடுத்து கேட்சுகளை கோட்டைவிட்டனர். குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு இரண்டு கேட்சுகளை கோட்டைவிட்டனர். ஜெரால்டு கோட்சி மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் ரோகித் சர்மா கொடுத்த கேட்சுகளை அடுத்தடுத்து கோட்டைவிட்டனர். அதுமட்டுமல்லாமல் பீல்டிங்கிலும் சொதப்பினர். பேரிஸ்டோவ் ஒரு கேட்ச் வாய்ப்பில் தப்பி பிழைத்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் கடும் அதிருப்தி அடைந்தார். பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட பவுலர்கள் மீது நேரடியாகவே கோபத்தை காட்டினார். இதனால், அதிருப்தி அடைந்த பிரசித் கிருஷ்ணா சரியாக பந்துவீசவில்லை. அவரது ஓவரில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி தள்ளினார் ஜானி பேரிஸ்டோவ்
ரோகித் சர்மா அதிரடி பேட்டிங்
இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பியதால் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தில் புகுந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 300 சிக்சருக்கும் மேல் விளாசிய பேட்ஸ்மேன் என்ற அங்கீகாரமும் இன்றைய போட்டியில் ரோகித் சர்மாவுக்கு வந்தது. 50 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இன்று முதல் போட்டியில் களமிறங்கிய ஜானி பேரிஸ்டோவ் 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரும் தன் பங்கிற்கு 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளை விளாசினார்.
பின்வரிசையில் வந்த சூர்யகுமார் 33, திலக் வர்மா 25, ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் குவிக்க மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்களை குவிக்க முடிந்தது. அத்துடன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சவாலான வெற்றி இலக்கையும் நிர்ணயிக்க முடிந்தது. இந்த ஸ்கோரை சேஸிங் செய்தால் மட்டுமே குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். முலான்பூர் பிட்ச் பேட்டிங்கிற்கு உகந்தது என்றாலும் மும்பை அணியில் போல்ட், பும்ரா என பந்துவீச்சு ஜாம்பவான்கள் இருக்கின்றனர். குஜராத் அணி இவர்களை எப்படி எதிர்கொள்கிறது என்பதை பொறுத்தே அந்த அணியின் வெற்றி இருக்கும்.
மேலும் படிங்க: IPL 2025, GT vs MI : குவாலிஃபையர் 2 போட்டி முடிவை தீர்மானிக்கும் மும்பை, குஜராத் அணிகளின் 4 முக்கிய பிளேயர்கள்..!!
மேலும் படிங்க: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளில் மிக குறைவான ஸ்கோரை அடித்த அணிகள் எவை? பஞ்சாப் அணிக்கு எந்த இடம்?