இந்தியா கிரிக்கெட் அணி இந்த மாத தொடக்கமே இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், நாளை (ஜூன் 20) முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு தொடங்கிறது. எந்த மைதானத்தில் நடைபெறுகிறது. எந்த தொலைக்காட்சி அல்லது ஓடிடியில் பார்க்கலாம் என முழு விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மைதானம் மற்றும் நேரம்
நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கி 5 நாட்கள் ஜூன் 24ஆம் தேதி வரை நடைபெறும். இது 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி ஆகும். இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 3.30 மணிக்கு போட்டி தொடங்கும். இரவு 10.30 மணி வரை போட்டிகள் நடைபெறும். முதல் செஷன் 3.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும். இதையடுத்து இரண்டாவது செஷன் 6.10க்கு தொடங்கி 8.10 மணி வரை நடைபெறும். நாளின் கடைசி செஷன் 8.30 மணிக்கு முதல் 10.30 மணி வரை நடைபெறும்.
எதில் பார்க்கலாம்
இந்த டெஸ்ட் தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. அதுவே இணையதளம் மற்றும் மொபைலில் பார்க்க விரும்புபவர்கள், ஜியோ சினிமா செயலி மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம்.
இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விகீ), பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டோங், பிரைடன் கார்ஸ், ஷோயப் பஷீர்.
இந்தியா அணியின் பிளேயிங் லெவன் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே இங்கே உத்தேசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரிஷப் பண்ட் (விகீ & துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.
மேலும் படிங்க: ஐபிஎல்-க்கு வரும் புதிய அணி? பிசிசிஐக்கு ரூபாய் 538 கோடி அபராதம் விதிப்பு!
மேலும் படிங்க: இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : இலவசமாக பார்க்கலாம் – வெளியான புதிய அறிவிப்பு