Euro Millions: இதுவரை யாரும் பெறாத லாட்டரி ஜாக்பாட்டை வென்ற நபர்; எத்தனை கோடிக்கு அதிபதி தெரியுமா?

அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் 208 மில்லியன் பவுண்டுகள் (தோராயமாக ரூபாய் 2,120 கோடி) லாட்டரி டிக்கெட்டில் வென்றுள்ளார். இது ஐரோப்பாவில் இதுவரை வென்ற மிகப்பெரிய லாட்டரி பரிசாக கூறப்படுகிறது.

ஐரிஷ் என்ற நபர் தனது லாட்டரி டிக்கெட்டில் மிகப்பெரிய பரிசு தொகையை வென்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதிகபட்ச தொகையாக இந்த ஜாக்பாட்டை ஐரிஷ் வென்றுள்ளார்.

ஐரோப்பாவில் மிகப்பெரிய டிராவாக பார்க்கப்படும், “யூரோ மில்லியன்ஸ்” சூப்பர் டிரா சமீபத்தில் நடைபெற்றது. தற்போது யூரோ மில்லியன் லாட்டரி, மிகப்பெரிய பரிசுடன் காத்துக்கொண்டிருக்கிறது.

கால்பந்து வீரர் ஹாரி கேன் மற்றும் பாப் நட்சத்திரம் துவா லிபா

தி மிரரின் கூற்றுப்படி, ஜாக்பாட்டை வென்ற ஐரிஷின் சொத்து மதிப்பு, தற்போது 115 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்ட கால்பந்து வீரர் ஹாரி கேன் மற்றும் 110 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்ட பாப் நட்சத்திரம் துவா லிபா போன்ற பிரபலங்களை விட அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய லாட்டரி தலைமை நிர்வாகி சியான் மர்பி கூறுகையில் “மக்கள் தங்களது யூரோ மில்லியன் டிக்கெட்டுகளை கவனமாக சரி பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.

அப்படி தங்களது டிக்கெட்டுகளை சரிபார்த்து, அவர்கள் வெற்றியாளர்களாக இருந்தால் டிக்கெட்டின் பின்புறத்தில் கையொப்பமிட்டு அதை பாதுகாப்பாக வைத்து, தேசிய லாட்டரி தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

வெற்றி பெற்ற டிக்கெட்டின் இருப்பிடத்தை விரைவில் வெளியிடுவோம். மேலும் டிக்கெட் குறித்த விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.