LPG கனெக்ஷனுடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி? முக்கிய அப்டேட்

How To Link Aadhaar With LPG Connection: உங்கள் எல்பீஜி (LPG) கனெக்ஷனுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் மட்டுமே மானியம் கிடைகும். ஆங்கிலத்தில் சப்ஸிடி என சொல்வார்கள். இந்த இணைப்பு மேலும் மோசடி தடுக்கப்படும். இந்த வழிகாட்டியில் ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் கால் சென்டர் மூலம் இணைப்பதற்கான எளிய படிகள் உள்ளன.

ஆதாரை எல்பீஜி கனெக்ஷனுடன் இணைக்கும் முறைகள்

1. ஆன்லைனில் இணைப்பது (Step-by-Step)

– UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளம் செல்லவும்.
– “Benefit Type”-ல் “LPG” எனத் தேர்ந்தெடுக்கவும்.
– உங்கள் எல்பீஜி சப்ளையர் (Indane, BharatGas, HP Gas) தேர்ந்தெடுக்கவும்.
– உங்கள் உள்ளூர் டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் கன்ஸ்யூமர் நம்பர் உள்ளிடவும்.
– மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் ஆதார் விவரங்களை நிரப்பவும்.
– OTP உறுதிப்படுத்தல் செய்யவும் (மொபைல் & மின்னஞ்சலில் வரும் OTP உள்ளிடவும்).
– வெற்றிகரமாக இணைக்கப்பட்டதற்கான அறிவிப்பை காத்திருக்கவும்.

2. ஆஃப்லைனில் இணைப்பது

– உங்கள் எல்பீஜி சப்ளையர் (Indane/HP/BharatGas) வலைத்தளத்தில் இருந்து சப்ஸிடி படிவம் பதிவிறக்கம் செய்யவும்.
– படிவத்தை ஆதார், எல்பீஜி கனெக்ஷன் எண் போன்ற விவரங்களுடன் நிரப்பவும்.
– அதை உங்கள் அருகிலுள்ள எல்பீஜி டிஸ்ட்ரிபியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

3. கஸ்டமர் கேர் மூலம் இணைப்பது

உங்கள் எல்பீஜி சப்ளையரின் கஸ்டமர் கேர் எண்ணை அழைக்கவும்:

– இண்டேன் (Indane): 84549 84549
– பாரத்கேஸ் (BharatGas): 79979 99799
– எச்பி கேஸ் (HP Gas): 1800-233-3555
ஆதார் மற்றும் எல்பீஜி விவரங்களை கொடுத்து, ஆப்பரேட்டர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

ஆதார்-எல்பீஜி இணைப்பின் நன்மைகள்

– சப்ஸிடி நேரடியாக வங்கி கணக்கில் (DBTL – Direct Benefit Transfer).
– போலி கனெக்ஷன்களை தடுக்கும்.

இணைப்பு செயல்முறை 24 முதல் 48 மணி நேரம் ஆகலாம். வெற்றிகரமான இணைப்பிற்குப் பிறகு, SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தல் வரும்.

தேவையான ஆவணங்கள்:

– ஆதார் அட்டை
– எல்பீஜி கன்ஸ்யூமர் நம்பர்
– பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்

இந்த எளிய படிகளைப் பின்பற்றி, உங்கள் எல்பீஜி கனெக்ஷனுடன் ஆதாரை இணைத்து பாதுகாப்பான சப்ஸிடி பெறலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.