விவோ Y400 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y400 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மிட்-செக்மென்ட் பிரிவில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது இந்தியாவில் Y400 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘Y’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வரிசையில் Y400 புரோ மாடல் போன் சந்தையில் வெளிவந்துள்ளது.

விவோ Y400 புரோ ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்:

  • 6.78 இன்ச் ஃபுல் ஹெச்டி+ AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7300 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • இரண்டு கேமராவிலும் 4கே வீடியோ சப்போர்ட் உள்ளது
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • 5,500mAh பேட்டரி
  • 90 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • 60 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் செய்யும் அம்சம்
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது
  • இந்த போனின் விலை ரூ.24,999 முதல் ஆரம்பமாகிறது
  • இந்த போனின் விற்பனை வரும் 27-ம் தேதி முதல் தொடங்குகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.