Agaram: "ரசிகர் மன்றம் அரசியலுக்கு போறவங்களுக்கு; நீ ஏன் அதைப் பண்ணுறன்னு அவர் கேட்டார்" – கமல்ஹாசன்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், நடிகர் மற்றும் எம்.பி கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒளிபரப்பப்பட்ட காணொளியில், “அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.

Agaram விதை 15-ம் ஆண்டு விழா
Agaram விதை 15-ம் ஆண்டு விழா

அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், “கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்” என்று உறுதிமொழி ஏற்றனர்.

ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மேடையில் பேசிய கமல்ஹாசன், “ரசிகர் மன்றத்தை நான் நற்பணி இயக்கமாக மாற்றியது, இவர் (சூர்யா) செய்தது எல்லாம் ஒன்றுதான்.

நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் இவர் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் ஒரு முன்னாடி இருக்கிறார்.

இந்த ரசிகர் மன்றம் எல்லாம் வேண்டாம் என்று எனக்கு சொன்னவர் சிவகுமார் அண்ணன்தான்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

`பெரியவர்கள் எல்லாம் அரசியல் செல்வதற்காக அதை ஆரம்பித்தார்கள். நீ ஏன் அதை செய்து கொண்டிருக்கிறாய்’ என்றார். நானும் `சரி’ என்று சொல்லிவிட்டேன்.

ஆனால், பாலச்சந்தர் சார் செய்த தப்பு, எனக்கு கொஞ்சம் நட்சத்திர அந்தஸ்து வந்து விட்டது.

சிவக்குமார்
சிவக்குமார்

நிறைய பேர் வந்தார்கள் வேண்டாம், என்றாலும் நிறுத்த மறுத்தார்கள்.

அப்புறம் அண்ணன்கிட்ட சாரி சொல்லிவிட்டு அதை நற்பணி இயக்கமாக மாற்றப் போகிறேன் என்று ஆரம்பித்தது தான் அது.

அதற்காக அவர் என்னைப் பாராட்டியிருக்கிறார்.

சூர்யா அற்புதமான கவிதை. விதை அவர் (சிவக்குமார்). அவரிடம் கேட்டால் அவர் பல பேரைச் சொல்லுவார்.” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.