200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூர்: காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார்.

சிங்கப்பூரில் தேசிய நூலக வாரிய கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில், ‘சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான இது, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் தமிழர்க் கலைக் களஞ்சியம் எடுத்துரைக்கும் பற்பல தகவல்களில் தமிழ்ச் சமூகம் கண்​டு​வந்த சமூகச் சீர்​திருத்​தங்​கள் குறித்த தகவல்​களைத் தனது உரை​யில் அதிபர் மேற்​கோள் காட்​டி​னார்.

இவ்​விழா​வில் அதிபர் தர்​மன் சண்​முகரத்​னம் பேசும்​போது, ‘‘பண்​பாட்டை பேணும் உறை​விட​மாக சிங்​கப்​பூர் தொடர்ந்து திகழ வேண்​டும். எந்த வகையி​லான பாகு​பாட்​டை​யும் பொறுத்​துக்​கொள்​ளாத சமூக முன்​னேற்​றம் தொடர்ந்து நிலவ வேண்​டியது மிக​வும் அவசி​யம்.

பல துணை இனக் கலாச்​சா​ரங்​கள் உட்பட பண்​பாடு​களைப் பாது​காக்​கக்​கூடிய இடமாக நமது நாடு இருக்க வேண்​டும். இதுவே உலகளா​விய இந்​திய சமூகத்​துக்கு மத்​தி​யில் சிங்​கப்​பூர் தமிழர்​களை​யும் சிங்​கப்​பூர் இந்​தி​யர்​களை​யும் தனித்​து​வ​மிக்​கவர்​களாகத் திகழச் செய்​யும்’’ என்​றார்.

சிங்கப்பூர் தமிழ்ப் பண்​பாட்டு மைய​மும் தேசிய நூலக வாரிய​மும் இணைந்து உரு​வாக்கி உள்ள ‘சிங்கப்பூர் தமிழர்க் கலைக்​களஞ்​சி​யம்’ மின் நூல், நாட்​டில் தமிழிலும் ஆங்​கிலத்​தி​லும் உரு​வான முதல் கலைக்​களஞ்​சி​யம் என்ற சிறப்​பைப் பெற்​றுள்​ளது.

இதன் அங்​க​மாக, தமிழ்ச் சமூகத்​தின் கதைகள், வரலாற்​றைத் தலை​முறை கடந்​தும் கடத்​தும் நோக்​கில் ஏறத்​தாழ 375 பகு​தி​களில் பல்​வேறு தகவல்​களை விவரிக்​கும் துல்​லிய​மான பதிவு​கள் தகுந்த ஆதா​ரத்​துட​னும் புகைப்​படங்​களு​ட​னும் தேசிய நூலக வாரி​யத்​தின் மின்​தளத்​தில் இடம்​பெற்​றுள்​ளன.

கலைக்​களஞ்​சி​யத்தை இணை​ய​வெளி​யில் படிப்​ப​தற்​கான வழி​முறை, இரு​மொழிகளி​லும் ஒருசேரப் படிக்க உதவும் தொழில்​நுட்​பம், வாழும் கலைக்​களஞ்​சி​யத்​தில் புதிய தலைப்​பு​களை இணைக்க என்ன செய்ய வேண்​டும் என்​பது பற்​றி, சிங்​கப்​பூர் தமிழர்க் கலைக்​களஞ்​சி​யம் தொகுப்​பின் துணை ஆசிரியர்​கள் அழகிய பாண்​டியன், சிவானந்​தம் நீல​கண்​டன் ஆகிய இரு​வரும் விளக்​கினர்.

விழா​வில் சிங்கப்பூர் தமிழ்ப் பண்​பாட்டு மையத்​தின் தலைமை நிர்​வாகி​யும் தொகுப்​பின் ஆசிரியரு​மான அருண் மகிழ்​நன் பேசும்​போது, ‘‘இந்த மின் நூல் மக்​களைப் பற்றி மக்​களால் உரு​வாக்​கப்​பட்ட தேர். இந்த அருஞ்​செல்​வம் உருப்​பெற உதவி புரிந்​தோருக்கு நன்​றி. இதனை வாழும் களஞ்​சி​ய​மாக நிலைக்​கச் செய்ய, சமூகத்​தைத் தொடர்ந்து ஈடு​படுத்​தும் முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​படும்’’ என்​றார்.

தேசிய நூலக வாரிய தமிழ்​மொழிச் சேவை​கள் பிரி​வின் துணை இயக்​குநரு​மான அழகிய பாண்​டியன் மேலும் கூறும்​போது, ‘‘இந்​தக் கலைக்​களஞ்​சி​யத்தை உரு​வாக்​கு​வதற்​கான மூன்று ஆண்​டுப் பயணம் சுவாரசி​ய​மானது. எதிர்​காலச் சந்​த​தி​யினருக்​கான ஒரு கரு​வூலத்தை உரு​வாக்​கு​வ​தில் பங்​காற்ற கிடைத்த வாய்ப்​பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். தேசிய நூலக வாரி​யம் இருக்​கும் வரை சிங்கப்பூர் தமிழர்க் கலைக்​களஞ்​சி​யம் வாழும்’’ என்​றார்.

இவ்​விழா​வில் அதிபர் தர்​மனின் மனைவி ஜேன் இத்​தோகி, தகவல், மின்​னிலக்க மேம்​பாட்டு அமைச்​சர் ஜோசஃபின் டியோ, மனிதவள மற்​றும் கலாச்​சார, சமூக, இளை​யர் துறை துணை அமைச்​சர் தினேஷ் வாசு தாஸ், பங்​காளித்​துவ அமைப்​பினர், தொண்​டூழியர்​கள்​ உட்​பட சுமார்​ 600 பேர்​ கலந்​து கொண்​டனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.