India National Cricket Team: 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்துவிட்டு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு இந்திய டெஸ்ட் அணி நாடு திரும்பிவிட்டது.
இனி அடுத்து அக்டோபர் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் உடன் சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதுவரை இனி இந்திய அணி வொயிட் பால் போட்டிகளையே விளையாட இருக்கிறது.
Team India: வருகிறது ஆசிய கோப்பை 2025
அதுவும் இந்த மாதம் இந்திய அணி (Team India) வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக அந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால், ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்திய அணி சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. அடுத்து செப்டம்பர் முதல் வாரம் ஆசிய கோப்பை தொடங்கியிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி மற்றும் துபாயில் தொடர் நடைபெறுகிறது.
இந்த தொடர்தான் பலரும் எதிர்பார்க்கும் தொடராக இருக்கிறது. மேலும், டி20 உலகக் கோப்பை நெருங்குவதால் ஆசியக்கோப்பை (Asia Cup 2025) டி20 வடிவில் நடைபெறுகிறது. இதனால் விராட் கோலி, ரோஹித் சர்மாவை செப்டம்பரிலும் பார்க்க முடியாது. இன்னும் தொடர் தொடங்க ஒரு மாதமே உள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப். 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. செப். 28ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.
Team India: கேப்டனாகும் கில்…?
மொத்தம் 8 அணிகள் மோதும் இந்த தொடரில் 19 டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங், ஓமன் ஆகிய 8 அணிகள் ஆசிய கோப்பையில் விளையாட உள்ளன. பிசிசிஐ விரைவில் இந்திய அணியின் ஸ்குவாடை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். இவருக்கு குடலிறக்கம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் உள்ளார். ஒருவேளை இவர் விளையாடாவிட்டால், சுப்மான் கில் அணிக்குள் கேப்டனாக வர வாய்ப்புள்ளது.
Team India: ஸ்குவாடில் யார் யாருக்கு வாய்ப்பு?
ஐபிஎல் தொடரில் கலக்கிய ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டி20 அணிக்குள் வர வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, அக்சர் பட்டேல், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் நிச்சயம் ஸ்குவாடில் இடம்பெறுவார்கள். ஹர்திக் பாண்டியா வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக நிச்சயம் விளையாடுவார்.
மேலும் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வருவது கடினம். எனவே கேஎல் ராகுல் அல்லது துருவ் ஜூரேல் ஆகியோருக்கு வாய்ப்புள்ளது. சுழற்பந்துவீச்சை பொருத்தவரை வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் நிச்சயம் விளையாடுவார்கள். பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் நிச்சயம் விளையாட மாட்டார்கள் என்பதால் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் வேகப்பந்துவீச்சாளர்களாக நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். ஹர்ஷித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.
Team India: இந்திய அணியின் உத்தேச ஸ்குவாட்
சூர்யகுமார் யாதவ் / சுப்மான் கில் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், திலக் வர்மா, துருவ் ஜூரல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா/ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.
மேலும் படிக்க | ரோகித் வேண்டாம்.. இந்த வீரரை ODI கேப்டன் ஆக்குங்க! பெருகும் ஆதரவு
மேலும் படிக்க | இந்திய அணி அடுத்து விளையாடப்போகும் போட்டிகளின் தேதி – முழு விவரம்..!!
மேலும் படிக்க | இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் போட்டி யாருடன் தெரியுமா?