புதுடெல்லி,
24-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2030-ம் ஆண்டு நடைபெற உள்ளது. 2036-ல் நடைபெற ஒலிம்பிக் தொடரை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியா முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போட்டிகளை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் இந்தியா தனது விண்ணப்பத்தை விரைவில் சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா ஏற்கனவே 2010-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளை புதுடெல்லியில் நடத்தியுள்ளது. அப்போது சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், போட்டிகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.