லண்டன்,
ரஷியா – உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஒரு ராணுவ தளத்தில் நடக்கிறது. இந்த போர் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரின் அலுவலகத்துக்கு நேரில் சென்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்து உரையாடி உள்ளார். இந்தச் சந்திப்பில் பேசியவைக் குறித்து எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
முன்னதாக, அமெரிக்க மற்றும் ரஷியா அதிபர்களின் சந்திப்பில், தங்களது நலன் மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஆபத்தில் ஆழ்த்திவிடக்கூடும் என அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் கவலைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தச் சந்திப்பில் உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு அதிபர் புதின் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ரஷியா பல கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.