சென்னை: விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்தியும், தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தியும், சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்துடன் 9 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று (ஆக., 15) கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகமான கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை […]
