இந்திய அணியின் அதிரடி வீரராக கருதப்பட்டவர் வீரேந்திர சேவாக். இவர் பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்ப அதிகம் விரும்பக்கூடியவர். குறிப்பாக முதல் பந்திலேயே பவுண்டரி அடிப்பவர் என்ற பெயர் பெற்றவர். இவர் 104 டெஸ்ட் மற்றும் 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் சேவாக் சுமார் 17000 ரன்களை குவித்திருக்கிறார். மொத்தமாக 38 சர்வதேச சதங்கள் மற்றும் 70 அரைசதங்களும் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெயர் பெற்றவர். அதே போல், சச்சினுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரரும் இவர்தான்.
இந்த நிலையில், வீரேந்திர சேவாக், தனது ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்துள்ளார். அவர் 2008ஆம் ஆண்டிலேயே ஓய்வு முடிவை எடுத்ததாகவும் அதனை சச்சின் டெண்டுல்கர்தான் தடுத்ததாகவும் அவர் பேசி உள்ளார். இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், 2008ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரின்போது, முதல் மூன்று போட்டிகளில் ஆடிய பிறகு, எம்.எஸ். தோனி என்னை அணியில் இருந்து நீக்கினார். அதன்பிறகு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்றால், பின்னர் எதற்க்காக ஒருநாள் போட்டிகளில் நீடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று முடிவுக்கு வந்தேன். இதனை சச்சின் டெண்டுல்கரிடம் பகிர்ந்தேன். அப்போது அவர், வேண்டாம் எனக்கும் இப்படியான ஒரு நிலை 1999 – 2000 காலகட்டத்தில் ஏற்பட்டது. கிரிக்கெட்டையே விட்டுவிடலாம் என நினைத்தேன்.
ஆனால் அந்த மோசமான காலகட்டம் கடந்துபோனது. தற்போது நீ அந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறார். எனவே இதுவும் கடந்துபோகும். ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்காதே. ஒரு இரண்டு தொடர்கள் வரை காத்திரு. அதன்பிற்கு ஒரு முடிவை எடு என கூறினார் என சேவாக் தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கரின் இந்த அறிவுரை ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மட்டுமல்ல கிரிக்கெட்டின் ஒரு முக்கிய அத்தியாயத்தையே காப்பாற்றி உள்ளது என்லாம்.
சச்சின் வார்த்தைகளை கேட்டு உத்வேகம் அடைந்த வீரேந்திர சேவாக், ஓய்வு முடிவை கைவிட்டார். பின்னர் மீண்டும் இந்திய அணிக்குள் வந்த அவர் சிறப்பாக விளையாடினார். 2011ஆம் ஆண்டில் இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல சேவாக்கும் ஒரு முக்கிய காரணம் ஆவார்.
About the Author
R Balaji