லண்டன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடரும், அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. அதன்படி முதல் ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி புரூக் தலைமையிலான அந்த அணிகளில் ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர் ஜேக்கப் பெத்தேல் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:
ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், சோனி பேக்கர், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாகிப் மக்மூத், ஜேமி ஓவர்டன், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேமி ஸ்மித்
டி20 அணி: ஹாரி புரூக் (கேப்டன்),, ரெஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாகிப் மக்மூத், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், லூக் வுட்