அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

சென்னை: அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு நடவடிக்​கை​யால் தமிழக உற்​பத்தி துறை கடும் நெருக்​கடியை எதிர்​கொண்​டுள்​ளது. லட்​சக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரம் அச்​சுறுத்​தலுக்கு உள்​ளாகி​யிருக்​கிறது. இந்த இக்​கட்​டான சூழ்​நிலையை சமாளிக்​க​வும், வர்த்​தகத்தை மீட்​க​வும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்டா​லின் நேற்று எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா – அமெரிக்கா இடையே, இரு நாடு​களுக்​கும் பயனளிக்​கக்​கூடிய வர்த்தக ஒப்​பந்​தத்தை எட்​டு​வதற்கு மத்​திய அரசு மேற்​கொண்​டுள்ள முயற்​சிகளை பாராட்​டு​கிறேன். தேசிய நலன்​களை பாது​காப்​ப​தற்​கான மத்​திய அரசின் நிலைப்​பாட்டை முழு​மை​யாக ஆதரிக்​கிறேன். அதே​நேரம், அமெரிக்​கா​வின் 25 சதவீத வரி​வி​திப்பு மற்​றும் அதன் தொடர்ச்​சி​யாக 50 சதவீத​மாக வரி அதி​கரிப்பு காரண​மாக கடும் தாக்​கங்​களை எதிர்​கொள்​வ​தால், தமிழகத்​தில் ஏற்​பட்​டுள்ள கவலை அளிக்​கும் பிரச்​சினை குறித்து தங்​கள் கவனத்​துக்கு கொண்டு வரு​கிறேன்.

தமிழகத்தில் தாக்கம் அதிகம்: கடந்த நிதி ஆண்​டில், இந்​தி​யா​வின் மொத்த ஏற்​றும​தி​யான 433.6 பில்​லியன் டாலர் மதிப்​பிலான பொருட்​களில் 20 சதவீதம் அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த நிலை​யில், தமிழகத்​தின் 52.1 பில்​லியன் டாலர் பொருட்​களில் 31 சதவீதம் அமெரிக்கா​வுக்கு ஏற்​றும​தி​யாகி​யுள்​ளது. இவ்​வாறு அமெரிக்க சந்​தையை தமிழகம் அதி​க​மாக சார்ந்​துள்​ள​தால், இந்​தி​யா​வில் மற்ற மாநிலங்​களை​விட தமிழகத்​தில் இந்த இறக்​குமதி வரி​யின் தாக்​கம் அதி​க​மாக இருக்​கும். இது தமிழக உற்​பத்தி துறை, வேலை​வாய்ப்​பில் கடும் பாதிப்பை ஏற்​படுத்​தும்.

இந்த வரி விதிப்​பால், ஜவுளி, ஆடைகள், இயந்​திரங்​கள், ஆட்​டோமொபைல், நகைகள் – ரத்​தினக் கற்​கள், தோல், காலணி​கள், கடல் பொருட்​கள், ரசாயனம் ஆகிய துறை​களில் மிக​வும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. இந்த துறை​கள் அனைத்​தும் அதிக தொழிலா​ளர்​களை சார்ந்​தவை என்​பது இன்​னும் கவலைக்​குரியது. இதில் எந்த ஒரு ஏற்​றுமதி மந்த நிலை​யும் விரை​வாக பெரு​மளவி​லான பணி இழப்​பு​களுக்கு வழி​வகுக்​கும். கடந்த 2024-25-ம் ஆண்​டில் இந்​தி​யா​வின் ஜவுளி ஏற்​றும​தி​யில் தமிழகம் 28 சதவீதம் அளவுக்கு பங்​களித்​தது. இது நாட்​டின் மற்ற மாநிலங்​களை​விட மிக​வும் அதி​கம்.

வேலை இழக்கும் அபாயம்: குறிப்​பாக, தமிழகத்​தில் ஜவுளித் துறை 75 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு அளித்​துள்​ளது. இந்த சூழலில், தற்​போது 25 சதவீத வரி மற்​றும் முன்​மொழியப்​பட்​டுள்ள 50 சதவீத வரி​யின் காரண​மாக, 30 லட்​சம் பேர் வேலை இழக்​கும் அபா​யம் உள்​ளது. இந்த நெருக்​கடியை தணிக்க, நமது ஏற்​றுமதி போட்​டித் தன்​மைக்கு நீண்​ட​கால​மாக தடை​யாக உள்ள கட்​டமைப்பு சிக்​கல்​களை தீர்ப்​பது அவசி​யம். இதுதொடர்​பாக, பாதிக்​கப்​பட்ட துறை​களைச் சேர்ந்த தொழில் அமைப்​பு​களு​டன் விரி​வாக ஆலோ​சனை நடத்​தினேன். அதன் அடிப்​படை​யில், ஜவுளித் துறைக்கு இரண்டு அம்​சங்​களில், அதாவது, மனித​னால் உரு​வாக்​கப்​பட்ட இழை மதிப்பு சங்​கி​லிக்​கான ஜிஎஸ்டி விகிதங்​களில் உள்ள முரண்​பாடு​களை நீக்​கி, தலைகீழ் வரி கட்​டமைப்பை சரிசெய்ய வேண்​டும். முழு சங்​கி​லியை​யும் 5 சதவீத ஜிஎஸ்டி அடுக்​குக்​குள் கொண்டு வரு​வது மற்​றும் அனைத்து வகை​யான பருத்​திக்​கும் இறக்​குமதி வரி​யில் இருந்து விலக்கு அளிப்​பது ஆகிய​வற்​றில் துரித நடவடிக்கை தேவைப்​படு​கிறது.

மேலும், அவசர கடன் வரி உத்​தர​வாத திட்​டத்​தின்​கீழ் (ECLGS) 30 சதவீதம் பிணை​யில்லா கடன்​களை 5 சதவீத வட்டி மானி​யம் மற்​றும் அசலை திருப்பி செலுத்​து​வ​தில் 2 ஆண்டு தற்​காலிக தடை​யுடன் நீட்​டித்​தல், ஏற்​றுமதி பொருட்​கள் மீதான தீர்​வை​கள், வரி​களை நீக்​குதல் (RoDTEP) திட்​டத்​தின் பயன்​களை 5 சதவீத​மாக உயர்த்​துதல், நூல் உட்பட அனைத்து ஜவுளிப் பொருள் ஏற்​றும​திக்​கும் முன் மற்​றும் பின்​கடனை நீட்​டித்​தல் ஆகியவை நமது ஏற்​றுமதி போட்​டித் தன்​மையை வலுப்​படுத்​து​வதற்​கான பிற முக்​கிய​மான காரணி​களாக முன்​னிலைப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

உலகளா​விய வர்த்​தகத்​தில் சுங்​கவரி தாக்​கங்​கள், போட்டி அழுத்​தங்​கள் காரண​மாக, மற்ற துறை​களும் இதே​போன்ற சவால்​களை எதிர்​கொள்​கின்​றன. அதற்கு உடனடி நிவாரணம் வழங்​கி, பணப் புழக்​கத்தை மேம்​படுத்​த​வும், செல​வுச் சுமை​களைக் குறைக்​க​வும் சுங்க வரி​களால் பாதிக்​கப்​பட்ட அனைத்து ஏற்​றும​தி​யாளர்​களுக்​கும் சிறப்பு வட்டி மானி​யத் திட்​டம் அறி​முகம், அதிக சுங்க வரி சந்தை அபா​யங்​களை ஈடு​கட்ட, தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தங்​கள் (FTA) மற்​றும் இருதரப்பு ஒப்​பந்​தங்​களை விரைவுபடுத்​துதல் ஆகிய​வற்றை மத்​திய அரசு பரிசீலிக்க வேண்​டும்.

இந்த பிரச்​சினை​யின் தீவிரத்தை கருத்​தில் கொண்​டு, கரோனா காலத்​தில் செயல்​படுத்​தப்​பட்​டது​போல, அசலை திருப்​பிச் செலுத்​து​வ​தில் சலுகை உள்​ளிட்ட ஒரு சிறப்பு நிதி நிவாரணத் தொகுப்​புடன் நமது ஏற்​றும​தி​யாளர்​களை ஆதரிக்க வேண்​டியது மிகவும் அவசி​யம். பிரேசில் அரசு அந்​நாட்டு ஏற்​றும​தி​யாளர்​களுக்கு வரி தள்​ளிவைப்பு மற்​றும் வரிச் சலுகைகளை அறி​வித்​துள்​ளது. இதுபோன்ற முயற்​சியை இந்​தி​யா​விலும் நாங்​கள் எதிர்​பார்க்​கிறோம். இதுவரை காணாத நெருக்கடி தமிழகத்​தின் வலு​வான உற்​பத்தி துறை, இது​வரை கண்​டி​ராத ஒரு நெருக்​கடியை தற்​போது எதிர்​கொள்​கிறது. பல்​வேறு துறை​களில் லட்​சக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரம் அச்​சுறுத்​தலுக்கு உள்​ளாகி​யிருக்​கிறது.

எனவே, தாங்​கள் இந்த விஷ​யத்​தில் அவசர​மாக தலை​யிட்​டு, சம்​பந்​தப்​பட்டஅமைச்​சகங்​கள் மற்​றும் தொழில் துறை​யினருடன் கலந்​துபேச வேண்​டும். இந்த இக்​கட்​டான சூழ்​நிலையை சமாளிக்​க​வும், வர்த்​தகத்தை மீட்​டெடுக்​க​வும் மத்​திய அரசு மேற்​கொள்​ளும் அனைத்து நடவடிக்​கைகளுக்​கும் தமிழகம்​ முழு ஒத்​துழைப்​பு வழங்​கும்​. இவ்​வாறு கடிதத்​தில்​ முதல்​வர்​ தெரிவித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.