சிட்னி,
நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால் அவர்களை பேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டுவது வழக்கமாகும். இருப்பினும் அவர்கள் தற்போது தங்களின் கெரியரின் இறுதி கட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பேப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் சுமித்திடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஆல் டைம் சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “நான் ஜாக் காலிஸைத் தேர்ந்தெடுப்பேன். மன்னிக்கவும், எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் என்று நினைக்கிறேன். எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர்தான்” என்று கூறினார்.
பேப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவர் பெயரை கூறுவார் என்று அனைவரும் நினைத்த வேளையில் ஸ்டீவ் சுமித், சச்சின் பெயரை குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார்.