அர்ஜுன் டெண்டுல்கர் வருங்கால மனைவியின் சொத்து மதிப்பு? சச்சினை விட 28 மடங்கு அதிகம்!

Arjun Tendulkar Fiance Saaniya Chandhok Net Worth: வழக்கம் போல் தற்போது கிரிக்கெட் வீரர்கள் கல்யாண சீசன் எனலாம். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கும், சமாஜ்வாதி மக்களவை உறுப்பினர் பிரியா சரோஜ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் அடுத்தாண்டு நடைபெறும் என தெரிகிறது.

Arjun Tendulkar Engagement: ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்

அதேபோல், சச்சின் டெண்டுல்கர் மகனும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு கடந்த வாரம் மிக ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அர்ஜுன் டெண்டுல்கருக்கும், அவரது நீண்ட நாள் தோழியான சானியா சந்தோக் என்பவருக்கும் திருமணமாக உள்ளது. இருவருக்கும் இடையிலான இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

Arjun Tendulkar: மூத்த பெண்ணை கரம்பிடிக்கும் அர்ஜுன்

அர்ஜுன் டெண்டுல்கருக்கு வயது தற்போது 25 ஆகும், சானியா சந்தோக்கிற்கு வயது 26. தன்னை விட ஒரு வயது மூத்த பெண்ணை அர்ஜுன் திருமணம் செய்ய இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர், தன்னை விட 5 வயது மூத்த பெண்ணான அஞ்சலியை தான் திருமணம் செய்துகொண்டார். தந்தையோ போல மகனும் வயதுக்கு மூத்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் என இணையத்தில் பலரும் பேசத் தொடங்கி உள்ளனர்.

Arjun Tendulkar: இன்னும் சோபிக்காத அர்ஜுன் டெண்டுல்கர்

அர்ஜுன் டெண்டுல்கர் 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஆனால் தற்போது வரை வெறும் 5 போட்டிகளிலேயே விளையாடியிருக்கிறார். 2023 சீசனில் 4 போட்டிகளையும், 2024 சீசனில் 1 போட்டியிலும் விளையாடி மொத்தமாக 3 விக்கெட்டை எடுத்திருக்கிறார். 2025 சீசனில் அணியில் இருந்தாலும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. 

முதல் தர போட்டிகளிலும் இவர் சுமாராகவே விளையாடியிருக்கிறார். மும்பை அணியில் முதலில் விளையாடிய அர்ஜுன் தற்போது கோவா அணியில் விளையாடுகிறார். முதல்தர போட்டிகளில் 17 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட் மற்றும் 532 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இந்திய இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இந்த சூழலை பயன்படுத்தி தன்னை நன்கு தயார்படுத்திக்கொண்டார் என்றால் ஐபிஎல் மட்டுமின்றி முதல் தர போட்டிகளிலும் விக்கெட் வேட்டை நடத்தலாம்.

Arjun Tendulkar: வியப்பில் ஆழ்த்திய அறிவிப்பு

கிரிக்கெட் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் இந்த தருணத்தில், அவர் வாழ்க்கையின் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்திருக்கிறார். 28 வயதை நெருங்கும் சாரா டெண்டுல்கரின் திருமண செய்திதான் முதலில் வரும் என பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில், அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம் என்று வந்த அறிவிப்பு பலரையும் வியப்பில்தான் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி, அர்ஜுன் டெண்டுல்கர் திருமணம் செய்துகொள்ளும் சானியா சந்தோக் யார், அவரின் குடும்ப பின்னணி என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுகுறித்து இங்கு காணலாம். 

Saaniya Chandhok: யார் இந்த சானியா சந்தோக்?

மும்பைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்களில் ஒருவர் ரவி காய் (Ravi Ghai). ரவி காயின் மகள் வழி பேத்திதான் சானியா சந்தோக். பெரும் நட்சத்திர ஹோட்டல்களை நடத்தும் Graviss குழுமம் இவருடையதுதான். மும்பையில் உள்ள InterContinental ஹோட்டலும் இந்த குடும்பத்திற்குச் சொந்தமானதுதான். Brookyln Creamery ஐஸ்கிரீம் பிராண்ட் இவருடையதுதான். Baskin-Robbins ஐஸ்கிரீம் பிராண்டில் இந்திய வணிகத்தையும் இவர்கள்தான் கவனித்துக்கொள்கிறார்கள். 

Saaniya Chandhok Net Worth: சானியா சந்தோக் குடும்ப சொத்து மதிப்பு

ரவி காயின் Graviss Food Solutions நிறுவனம் கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.624 கோடி வருமானத்தை குவித்துள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டை விட அது 20% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆகஸ்ட் நிலவரப்படி, Graviss குழுமத்தின் InterContinental ஹோட்டல் குழுமத்தின் உலகளாவிய மதிப்பு 18.43 பில்லியன் அமெரிக்க டாலர் என்று தெரிவிக்கப்படுகிறது. சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பை விட சானியா சந்தோக்கின் சொத்து மதிப்பு 18 மடங்கு அதிகம். 

Saaniya Chandhok: சானியா சந்தோக் கல்வித் தகுதி 

சானியா சந்தோக் லண்டனில் வணிக மேலாண்மைப் பட்டப்படிப்பை 2020ஆம் ஆண்டில் நிறைவு செய்திருக்கிறார். சானியா சந்தோக்கிற்கு குடும்பச் சொத்து இருப்பது மட்டுமின்றி அவரும் தனியே தொழில் நடத்தி வருகிறார். அதாவது, Mr. Paws என்ற செல்லப்பிராணிகளுக்கான ஸ்பா பிராண்டை சானியா சந்தோக் வைத்திருக்கிறார். நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கான இந்த சலூன் கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.