ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 09ஆம் தொடங்கி அம்மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஓமன், ஆப்கானிஸ்தான், யுஏஇ மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதுவரையில் இத்தொடருக்கான அணியை பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் வெளியிட்டிருக்கிறது.
இந்திய அணி சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் அணியை சல்மான் ஆகா அலி வழி நடத்த இருக்கின்றனர். மற்ற அணிகள் விரைவில் தங்களது வீரர்களை அறிவிக்கும். இத்தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் போட்டி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி மோதவுள்ளன. இவ்விரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை மோத வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃபிடம் இந்திய பாகிஸ்தான் போட்டி குறித்து ரசிகர் ஒருவர் கேட்கிறார். அதற்குஜ், இறைவனின் அருளால், நாங்கள் இரு போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என பதிலளித்தார். இவரது இந்த பேச்சு தற்போது வைரலாகி வருஇறது.
வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் மிகவும் நம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார். ஆனால் கள நலவரமோ அவ்வாறு இல்லை. அவை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கிறது. சமீபத்தில் கூட வங்கதேசத்திற்கு எதிரான தொடரை இழந்தது. மறுபக்கம் இந்திய அணி மிகுந்த பலத்துடன் உள்ளது. சிறப்பாக வீரர்களை கொண்ட பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி நல்ல ஃபார்=ர்மில் உள்ளது. மேலும், பாகிஸ்தான் அணியை ஒப்பிடும்போது இந்திய அணியில் அதிரடியான வீரர்கள் உள்ளனர். எனவே பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால், ஏதேனும் ஒரு அதிசயம் நடக்க வேண்ட்ம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பகல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் உறவு மேலும் வலுவை இழந்தது. இதனால், இரு அணிகளும் ஆசிய கோபையில் மோதுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் இடையே உள்ளது. ஏற்கனவே லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் போட்டியை இந்திய வீரர்கள் புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்க்து.
About the Author
R Balaji