அக். 27-ல் இந்திய கடல்சார் உச்சி மாநாடு: மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் தகவல்

சென்னை: இந்​திய கடல்​சார் உச்சி மாநாடு வரும் அக்​.27-ம் தேதி முதல் அக்​.31-ம் தேதி வரை 5 நாட்​களுக்கு மும்​பை​யில் நடை​பெற உள்​ளது. இதன்​மூல​மாக, ரூ.10 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மான முதலீட்டு வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் என்று மத்​திய கப்​பல் போக்​கு​வரத்து துறை செயலர் ராமச்​சந்​திரன் தெரி​வித்​தார்.

இது குறித்​து, சென்​னை​யில் நேற்று நிருபர்​களிடம் அவர் கூறிய​தாவது: இந்​திய கடல்​சார் உச்​சி​மா​நாடு வரும் அக்​.27-ம் தேதி முதல் அக்​.31-ம் தேதி வரை 5 நாட்​களுக்கு மும்​பை​யில் நடை​பெற உள்​ளது. இது துறை​முகங்​கள், கப்​பல் மற்​றும் நீர்​வழிகள் உட்பட கடல்​சார் துறை​யில் முன்​னேற்​றத்தை வெளிப்​படுத்​தும் நாட்​டின் முக்​கி​யத்​தளம் ஆகும்.

இதில், 100 நாடு​களில் இருந்து ஒரு லட்​சம் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்க உள்​ளனர். 500 கண்​காட்​சிகள் இடம்​பெற உள்​ளன.இது, ரூ.10 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மான முதலீட்டு வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இது உலகின் மிகப்​பெரிய கடல்​சார் நிகழ்​வு​களில் ஒன்​றாகும்.

வெளி​நாட்டு கப்​பல்​களை இந்​தி​யா​வுக்​குள் இயக்​கு​வதும், இந்​திய கப்​பல்​களை வெளி​நாடு​களுக்கு இயக்​கு​வதற்​கான ஒப்​பந்​தங்கள் மேற்​கொள்​ளப்​படும். சரக்கு கப்​பல்​களை தவிர, சுற்​றுலா சொகுசு கப்​பல்​களும் இயக்​கு​வதற்கு வழி​வகை செய்​யப்​படும்.

மஹா​ராஷ்டிரா மாநிலம் தஹானு அரு​கில் வாதவன் துறை​முகம் ரூ.80 ஆயிரம் கோடி​யில் கட்​டப்​படு​கிறது. கடந்த ஆண்​டில் இதற்கான பணி​கள் தொடங்​கப்​பட்​டன. 2029-ல் பணி​கள் முடித்​து, பயன்​பாட்​டுக்​கு​வரும்​போது. இந்​தி​யா​வின் கடல்​சார் வர்த்தகத்தை இரட்​டிப்​பாக்​கும்.

கடல் மற்​றும் ஆறுகள் அதி​க​மாக உள்ள மாநிலங்​களில், மக்​கள் நீர் வழி​போக்​கு​வரத்தை விரும்​பு​கின்​றனர். அதன்​படி, வாய்ப்​புள்ள பகு​தி​ களில் வாட்​டர் மெட்ரோ திட்​டத்​தை, மத்​திய கப்​பல் போக்​கு​வரத்து அமைச்​சகம் கொண்​டுவர உள்​ளது. இந்​தி​யா​வில் 18 நகரங்​களில் வாட்​டர் மெட்ரோ போக்​கு​வரத்தை கொண்​டுவர உள்​ளது.

இந்​த மாநாடு உலகளா​விய மற்​றும் உள்​ளூர் தலை​வர்​களை ஒருங்​கிணைத்து உரை​யாடல், புதுமை மற்​றும் கொள்கை முயற்​சிகளை ஊக்​குவிக்​கின்​றது. இவை நீடித்த மற்​றும் எதிர்​காலத்​துக்கு தேவை​யான கடல்​சார் சூழலை உரு​வாக்​கும்.

பங்குதாரர்கள் ஊக்குவிப்பு: மேலும், பிராந்​திய வணிக மற்​றும் வர்த்தக அமைப்​பு​களை விழிப்​புணர்​வூட்​டு​வது மற்​றும் மாநிலங்கள் மற்​றும் தொழில் பங்​கு​தா​ரர்​களை இந்த நிகழ்​வில் பங்​கேற்க ஊக்​கு​விப்​பது இதன் நோக்​க​மாகும். இது உள்​ளூர் வணி​கத்தை உலகளா​விய அளவுக்கு கொண்டு செல்​ல​வும், கூட்​டாண்​மை​களை உரு​வாக்​க​வும் உதவும். இவ்​வாறு அவர் கூறினார்.

பேட்​டி​யின்​போது, சென்னை துறை​முக தலை​வர் சுனில் பாலி​வால், துாத்​துக்​குடி துறை​முகத்​தின் தலை​வர் சுசந்த குமார், இந்​திய துறை​முக சங்​கத்​தின் நிர்​வாக இயக்​குநர் விகாஸ் நர்​வால், காம​ராஜர் துறை​முகத்​தின் நிர்​வாக இயக்​குநர் ஐரின் சிந்​தியா ஆகியோர் உடன் இருந்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.