சென்னை: தமிழ்நாட்டில், சாலையோரம் நடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றதின் தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. முன்னதாக, மதுரையில் இரு இடங்களில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்களின் […]
