இந்திய கிரிக்கெட் அணியில், பல வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைகவர்ந்துள்ளனர். இவர்களில் பலர் தங்களது வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுத்து, திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில், இன்னும் சில வீரர்கள் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்களாக வலம் வருகின்றனர். இந்திய அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங், எம்.பி. பிரியா சரோஜ் என்பவரை இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ள நிலையில், சில காரணங்களால் அந்த திருமணம் தள்ளி போயுள்ளது. ரிங்கு சிங்கின் திருமணம் முடிந்தால், இந்திய அணியில் பேச்சுலர்களின் எண்ணிக்கை மேலும் குறையும். தற்போது, இந்திய அணியில் திருமணம் ஆகாமல் ‘சிங்கிள்’ ஆக இருக்கும் முக்கிய வீரர்கள் யார் என்று பார்ப்போம்.
திருமணம் ஆகாத இந்திய கிரிக்கெட் வீரர்கள்
ஷுப்மன் கில்
இளம் தலைமுறை பேட்ஸ்மேன்களில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ஷுப்மன் கில், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. சமூக வலைதளங்களில், சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருடன் இவருக்கு காதல் என்று கூறப்பட்டாலும், ஷுப்மன் கில் தான் சிங்கிள் தான் என்று கூறியுள்ளார்.
ரிஷப் பந்த்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பந்தும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரது பெயர், இஷா நேகி என்பவருடன் இணைத்து பேசப்பட்டாலும், அவர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இஷான் கிஷன்
அதிரடி பேட்ஸ்மேனான இஷான் கிஷன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மாடல் அதிதி ஹுண்டியா என்பவருடன் இவருக்கு காதல் என்று சில தகவல்கள் கூறப்பட்டாலும், அவர் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார்.
மேற்கண்ட முக்கிய வீரர்களை தவிர, இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மற்றும் இடம்பெற வாய்ப்புள்ள பல இளம் வீரர்களும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்த பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், நிதிஷ் ரெட்டி, துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், பிருத்வி ஷா ஆகியோர் உள்ளனர்.
திருமணம் ஆன வீரர்கள்
இந்திய அணியில் திருமணம் ஆன வீரர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், சட்டேஸ்வர் புஜாரா, சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், அஜிங்க்யா ரஹானே, ஜெய்தேவ் உனத்கட், உமேஷ் யாதவ் ஆகியோர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
About the Author
RK Spark