"கேப்டன் பிரபாகரன்ல கடத்தல்காரன்தான் வில்லன்; ஆனா புஷ்பால.." – இயக்குநர் பேரரசு சொல்வது என்ன?

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’.

விஜயகாந்தின் 100-வது திரைப்படமான இத்திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது.

இப்படத்துக்குப் பிறகே ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று அழைக்கப்பட்டார்.

இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி, ஃபிலிமில் எடுக்கப்பட்ட அப்படம் டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலிஸாகி இருக்கிறது.

கேப்டன் பிரபாகரன்
கேப்டன் பிரபாகரன்

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, பேரரசு மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் திரையரங்கில் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இயக்குநர் பேரரசு, “நான் மட்டும் அல்ல. தமிழ்நாடே விஜயகாந்த் சாரை மிஸ் செய்கிறது.

ஏனென்றால் அவர் சிறந்த மனிதர். மிகவும் எளிமையானவர். என்னைப் பொறுத்தவரைக்கும் மக்கள் எந்த அளவிற்கு அவரை நேசித்தார்களோ அதனை விட இரு மடங்கு மக்களை அவர் நேசித்தார்.

அவர்தான் உண்மையான தலைவர். ‘கேப்டன் பிராபகரன்’ படத்தைப் பார்க்கும்போது விஜயகாந்த் சார் இறந்து விட்டார் என்ற எண்ணமே வரவில்லை.

இப்போதும் அவர் உயிரோடு இருக்கிறார் என்றே தோன்றுகிறது. அதற்கு காரணம் அவரது மனசு.

விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை விட அரசியல்வாதி என்பதைவிட நல்ல மனிதர் என்பது மிகப்பெரிய உண்மை.

'புஷ்பா-2'
‘புஷ்பா-2’

‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் சந்தன மரம் கடத்துபவர்கள் வில்லன். ஆனால் ‘புஷ்பா’ படத்தில் சந்தனக் கடத்தல் செய்கிறவர்தான் ஹீரோ.

இப்போது இருக்கும் சினிமாவில் போதைப்பொருள் கடத்துபவர்கள், ஆயுதம் கடத்துபவர்கள்தான் ஹீரோ.

இந்தப் படத்தை எல்லோருக்கும் போட்டுக்காட்ட வேண்டும். ஹீரோ என்றால் யார்? வில்லன் என்றால் யார்? என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

இப்போது உள்ள இயக்குநர்கள் இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.