When And Where Watch Duleep Trophy 2025: இந்தியாவின் உள்நாட்டு சீசன் இன்று தொடங்குகிறது எனலாம். இன்று துலிப் டிராபி தொடர் தொடங்க உள்ளது. துலிப் டிராபியை தொடர்ந்து ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபி என அனைத்து வடிவங்களின் உள்நாட்டு தொடர்களும் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.
Add Zee News as a Preferred Source
Duleep Trophy 2025: மோதும் 6 அணிகள்
அந்த வகையில், சிவப்பு பந்து கிரிக்கெட் தொடரான துலிப் டிராபியில் மண்டலம் வாரியாக அணிகள் விளையாடும். இந்த முறை வழக்கம் போல் 6 அணிகள் மோதுகின்றன. வடக்கு மண்டலம் (North Zone), வடகிழக்கு மண்டலம் (NorthEast Zone), கிழக்கு மண்டலம் (East Zone), மத்திய மண்டலம் (Central Zone), மேற்கு மண்டலம் (West Zone), தெற்கு மண்டலம் (West Zone) அணிகள் மோதுகின்றன.
Duleep Trophy 2025: தொடரின் பார்மட் இதுதான்
துலிப் டிராபி தொடர் நாக்-அவுட் வடிவில் நடைபெற உள்ளது. இரண்டு காலிறுதிப் போட்டிகள், இரண்டு அரையிறுதிப் போட்டிகள், இறுதிப்போட்டி என மொத்தமே 5 போட்டிகள்தான். இதில், கடந்த முறை முதலிரண்டு இடங்களை பிடித்து இறுதிப்போட்டியில் விளையாடிய மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகள் நேரடியாக அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும். மீதம் இருக்கும் அணிகள் காலியறுதிப் போட்டிகளில் மோதும். இன்று காலிறுதிப் போட்டிகள்தான் தொடங்குகின்றன.
Duleep Trophy 2025: முதல் காலிறுதிப் போட்டி
அந்த வகையில், முதல் காலிறுதியில் சுப்மான் கில் தலைமையிலான வடக்கு மண்டலம் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான கிழக்கு மண்டலம் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி பெங்களூரு நகரில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, செப். 4ஆம் தேதி தொடங்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் தெற்கு மண்டலம் அணியுடன் மோதும்.
Duleep Trophy 2025: 2வது காலிறுதிப் போட்டி
அதேபோல், இன்று பிசிசிஐ சிறப்பு மையத்தின் B மைதானத்தில் இரண்டாவது காலிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் மத்திய மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டலம் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, செப். 4ஆம் தேதி தொடங்கும் 2வது அரையிறுதிப் போட்டியில் மேற்கு மண்டலம் அணியுடன் மோதும். இறுதிப்போட்டி செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 15 வரை நடைபெறும். அனைத்து போட்டிகளும் பெங்களூரு நகரில்தான் நடைபெறுகின்றன. காலிறுதி மற்றும் அரையிறுதிச் சுற்றில் ஒவ்வொரு போட்டியும் 4 நாள்களுக்கு நடைபெறும். இறுதிப்போட்டி மட்டும் 5 நாள்களுக்கு நடைபெறும்.
Duleep Trophy 2025: தொடரின் அட்டவணை
காலிறுதிப் போட்டி 1 : வடக்கு மண்டலம் vs கிழக்கு மண்டலம் (ஆகஸ்ட் 28 – 31)
காலிறுதிப் போட்டி 2 : மத்திய மண்டலம் vs வடகிழக்கு மண்டலம் (ஆகஸ்ட் 28 – 31)
அரையிறுதிப் போட்டி 1: தெற்கு மண்டலம் vs காலிறுதி 1இல் வெல்லும் அணி (செப்டம்பர் 4 – 7)
அரையிறுதிப் போட்டி 2: மேற்கு மண்டலம் vs காலிறுதி 2இல் வெல்லும் அணி (செப்டம்பர் 4 – 7)
இறுதிப்போட்டி: அரையிறுதி 1இல் வெல்லும் அணி vs அரையிறுதி 2இல் வெல்லும் அணி (செப்டம்பர் 11 – 15)
Duleep Trophy 2025: தொடரை எங்கு நேரலையில் பார்ப்பது?
இந்த அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் உள்ளவர்கள் மொபைலில் JioHotstar தளத்தில் பார்க்கலாம். அனைத்து போட்டிகளும் காலை 9.30 மணிக்கே தொடங்கும். தொலைக்காட்சியில் ஒளிபரப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்களால் இப்போட்டிகளை மொபைலிலும் காண முடியாது.
Duleep Trophy 2025: 6 அணிகளின் ஸ்குவாட்கள்
வடக்கு மண்டலம்: சுப்மன் கில் (கேப்டன்), அங்கித் குமார் (துணை கேப்டன்), கன்ஹையா வாத்வான் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி, யாஷ் துல், ஷுபம் கஜூரியா, நிஷாந்த் சித்து, அர்ஷ்தீப் சிங், மயங்க் டாகர், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் காம்போஜ், யுத்வீர் சிங் சரக், ஆக்கிப் நபி, அங்கித் கல்சி, சாஹில் லோத்ரா.
– (இதில் சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர், ஆசிய கோப்பை தொடரில் விளையாடுச் செல்வதால் முதல் போட்டியில் மட்டுமே இருப்பார்கள். ஒருவேளை, இந்த அணி அரையிறுதிக்குச் சென்றால் சுப்மன் கில்லுக்கு பதிலாக சுப்மன் ரோஹில்லாவும், அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக குர்னூர் பிராரும், ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக அனுஜ் தக்ராலும் அணியில் சேர்க்கப்படுவார்கள்)
மேற்கு மண்டலம்: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), குமார் குஷாக்ரா (துணை கேப்டன்), ரியான் பராக், விராட் சிங், ஸ்ரீதாம் பால், உத்கர்ஷ் சிங், முகமது ஷமி, ஆகாஷ் தீப், முகேஷ் குமார், டெனிஷ் தாஸ், சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால், மனிஷி, சந்தீப் பட்நாயக், சரந்தீப் சிங், ஆஷிர்வாத் ஸ்வைன். (ஆகாஷ் தீப் முதல் போட்டியில் விளையாட மாட்டார்)
மத்திய மண்டலம்: துருவ் ஜூரல் (கேப்டன்), ரஜத் படிதார் (விக்கெட் கீப்பர்), ஆர்யன் ஜூயல் (விக்கெட் கீப்பர்), டேனிஷ் மலேவார், யாஷ் ரத்தோட், ஹர்ஷ் துபே, மானவ் சுதர், ஷுபம் சர்மா, கலீல் அகமது, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், ஆதித்யா தாகரே, சஞ்சீத் தேசாய், சரண்ஷ் ஜெயின், ஆயுஷ் பாண்டே. (இதில் ரஜத் படிதார் உடற்தகுதியை நிரூபித்தால் விளையாடுவார்)
வடகிழக்கு மண்டலம்: ஜொனாதன் ரோங்சென் (கேப்டன்), ஆகாஷ் குமார் சௌத்ரி, டெச்சி டோரியா, யும்னும் கர்னாஜித், செடெஜாலி ரூபெரோ, ஆஷிஷ் தாபா, ஹேம் பகதூர் சேத்ரி, ஜெஹு ஆண்டர்சன், அர்பித் சுபாஷ் பதேவாரா, பெரோய்ஜாம் ஜோதின் சிங், பல்ஸோர் தமாங், அன்குர் மாலிக், பிஷ்வர்ஜித் சிங் கோந்தௌஜம், ஆர்யன் போரா, லமாபம் அஜய் சிங்.
தெற்கு மண்டலம்: திலக் வர்மா (கேப்டன்), முகமது அசாருதீன் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), தன்மய் அகர்வால், ரிக்கி புய், ஸ்நேகல் கவுதங்கர், தேவ்தத் படிக்கல், சல்மான் நிஜார், என் பசில், குர்ஜப்னீத் சிங், எம்.டி. நிதீஷ், சாய் கிஷோர், டி. விஜய், வைஷாக் விஜய்க்குமார், மோஹித் காலே. (திலக் வர்மா விளையாட வாய்ப்பில்லை)
மேற்கு மண்டலம்: ஷர்துல் தாக்கூர் (கேப்டன்), சௌரப் நாவலே (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), ஆர்யா தேசாய், ஷ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்மீத் படேல், மனன் ஹிங்ராஜியா, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டின், தர்மேந்திரசிங் ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, அர்சான் நாக்வாஸ்வாலா.
Duleep Trophy 2025: மோதும் ஸ்டார் வீரர்கள்
சுப்மான் கில், அர்ஷ்தீப் சிங், நிதிஷ் ராணா, அபிமன்யு ஈஸ்வரன், முகமது ஷமி, முகேஷ் குமார், துருவ் ஜூரல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வீரர்கள் இன்றைய போட்டிகளில் விளையாட உள்ளார்கள் என்பதால் ரசிகர்கள் போட்டியை காண ஆர்வத்துடன் உள்ளனர்.
இங்கிலாந்து தொடரை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பின் இவர்கள் விளையாடுவதும் முக்கியத்துவம் பெறுகிறது. அரையிறுதிப் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், நாராயணன் ஜெகதீசன், தேவ்தத் படிக்கல், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோரும் விளையாடுவார்கள்.