RCB Cares: ஐபிஎல் 2025 தொடர் கடந்த ஜூன் 3ஆம் தேதி நிறைவடைந்தது. ஜூன் 3ஆம் தேதி அன்று அகமதாபாத் நகரில் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதல் ஐபிஎல் கோப்பையை தட்டிச்சென்றது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே உற்சாகத்தில் திழைத்தது.
Add Zee News as a Preferred Source
RCB Cares: 85 நாள்களுக்கு பின் பதிவு
ஆனால், அடுத்த நாள் ஜூன் 4ஆம் தேதி அன்று ஒட்டுமொத்த உலகமும் பெரும் சோகத்தில் மூழ்கியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே குவிந்தனர். இதனால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மோசமான நிகழ்ச்சி ஏற்பாடு, அனுமதியின்றி முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ரசிகர்களை திரட்டியது போன்ற பல குற்றச்சாட்டுகள் ஆர்சிபி நிர்வாகத்தின் மீது வைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பதாக ஆர்சிபி ஜூன் 5ஆம் தேதி அன்று அறிவித்தது. அதன் பின் அந்த அணி சமூக வலைதளங்களில் எவ்வித பதிவுகளையும் இடவில்லை. தொடர்ந்து 85 நாள்களுக்கு பின் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்றுதான் முதல் பதிவை போட்டனர். அதில் உயிரிழந்தவர்களுக்கு உரிய உதவிகளை வழங்கவும், ரசிகர்கள் மற்றும் ஆர்சிபி நல விரும்பிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் RCB Cares அமைப்பு விரைவில் தொடங்கப்படும் என குறிப்பிட்டனர்.
RCB Cares: 11 பேரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று (ஆகஸ்ட் 30) அதன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்சிபி குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை இழந்துவிட்டோம். அவர்கள் நமக்குள் ஒரு பகுதியாக இருந்தனர். நமது நகரம், நமது சமூகம் மற்றும் நமது அணியை தனித்துவமாக்குவதில் ஒரு பகுதி. அவர்கள் இல்லாதது நமது ஒவ்வொருவரின் நினைவுகளிலும் எதிரொலிக்கும்.
அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை எதை வைத்தும் ஒருபோதும் நிரப்ப முடியாது. ஆனால் முதல் படியாகவும், ஆழ்ந்த மரியாதையுடனும், ஆர்சிபி அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சத்தை வழங்கி உள்ளது. நிதி உதவியாக மட்டுமல்லாமல், இரக்கம், ஒற்றுமை மற்றும் தொடர்ச்சியான கவனிப்புக்கான வாக்குறுதியாகும்.
Our hearts broke on June 4, 2025.
We lost eleven members of the RCB family. They were part of us. Part of what makes our city, our community & our team unique. Their absence will echo in the memories of each one of… pic.twitter.com/1hALMHZ6os
— Royal Challengers Bengaluru (@RCBTweets) August 30, 2025
இது RCB Cares அமைப்பின் தொடக்கமாகும். அவர்களின் நினைவை மதிக்கத் தொடங்கும் அர்த்தமுள்ள செயலுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு. இதன் ஒவ்வொரு நகர்வும் ரசிகர்கள் என்ன உணர்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள், தகுதியானவர்கள் என்பதைப் பிரதிபலிக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
About the Author
Sudharsan G