ரெனால்ட் இந்தியாவின் ட்ரைபர், கிகர் என இரண்டின் அறிமுகத்தை தொடர்ந்து க்விட் ஃபேஸ்லிஃட் மாடலை அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில், குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருக்கலாம். 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் விலை க்விட் ஆனது ஆரம்பத்தில் 0.8லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இரு என்ஜின் ஆப்ஷனை பெற்றிருந்த நிலையில் காலப்போக்கில் மாசு உமிழ்வு மேம்பாடுகளை தொடர்ந்து 0.8 லிட்டர் என்ஜின் நீக்கப்பட்டது. […]
