நாடு முழுவதும் பு​திய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்தது: போலி விசாவுக்கு 7 ஆண்டு சிறை

புதுடெல்லி: புதிய குடியேற்ற சட்​டம் நேற்று முதல் அமலுக்கு வந்​துள்​ளது. இதன்​படி போலி பாஸ்​போர்ட், போலி விசா மூலம் இந்தியா​வுக்​குள் நுழைந்​தால் 7 ஆண்​டு​கள் சிறை, ரூ.10 லட்​சம் வரை அபராதம் விதிக்​கப்​படும். வெளி​நாட்​டினர் வரு​கையை முறைப்​படுத்த பாஸ்​போர்ட் சட்​டம்,வெளி​நாட்​டினர் பதிவு சட்​டம், வெளி​நாட்​டினர் சட்​டம், குடியேற்ற சட்​டம் போன்​றவை அமலில் இருந்​தன. அவை ஒன்​றிணைக்​கப்​பட்டு புதிய குடியேற்ற மசோதா 2025 வரையறுக்​கப்​பட்​டது.

இந்த மசோதா கடந்த ஏப்​ரலில் நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டு, குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. புதிய மசோ​தாவுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு கடந்த ஏப்​ரலில் ஒப்​புதல் வழங்​கி​னார். இதைத் தொடர்ந்து புதிய குடியேற்ற சட்​டம் 2025 நாடு முழு​வதும் நேற்று அமலுக்கு வந்​தது.

இதுகுறித்து சட்ட நிபுணர்​கள் கூறிய​தாவது: வெளி​நாட்​டின் வரு​கையை முறைப்​படுத்​தும் பல்​வேறு சட்​டங்​களை ஒன்​றிணைத்து புதிய சட்​டம் அமலுக்கு கொண்டு வரப்​பட்டு உள்​ளது. இதன்​படி போலி பாஸ்​போர்ட், போலி விசா மூலம் இந்​தி​யா​வுக்​குள் நுழை​யும் வெளி​நாட்​டினருக்கு குறைந்​த​பட்​சம் 2 ஆண்​டு​கள் முதல் அதி​கபட்​ச​மாக 7 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​படும். மேலும் குறைந்​த​பட்​சம் ரூ.1 லட்​சம் முதல் அதி​கபட்​சம் ரூ.10 லட்​சம் வரை அபராத​மும் விதிக்​கப்​படும்.

முறை​யான ஆவணங்​கள் இன்றி இந்​தி​யா​வுக்​குள் நுழை​யும் வெளி​நாட்​டினருக்கு 5 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை​யும் ரூ.5 லட்​சம் வரை அபராத​மும் விதிக்​கப்​படும். இந்​தி​யா​வுக்கு சட்​ட​விரோத​மாக வெளி​நாட்​டினரை அழைத்து வரும் நிறு​வனங்​களுக்கு ரூ.5 லட்​சம் வரை அபராதம் விதிக்​கப்​படும்.

விசா காலம் முடிவடைந்த பின்​னரும் இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினர் குறித்து ஹோட்​டல்​கள், மருத்​து​வ​மனை​கள், பல்​கலைக்​கழகங்​கள், நிறு​வனங்​கள் கண்​டிப்​பாக குடியேற்ற அதி​காரி​களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். சுற்​றுலா பயணி​கள், மாணவர்​கள், தொழிலா​ளர்​கள், வணி​கர்​கள், அகதி​கள்​-பு​கலிடம் கோருபவர்​கள், சட்​ட​விரோதமாக குடியேறிய​வர்​கள் என 6 பிரிவு​கள் புதிய சட்​டத்​தில் குறிப்​பிடப்​பட்டு உள்​ளன. இந்த பிரி​வினருக்​கான விதி​கள், நிபந்​தனை​கள், தண்​டனை​கள் சட்​டத்​தில் விரி​வாக விவரிக்​கப்​பட்டு உள்​ளன.

குறிப்​பாக பாகிஸ்​தானை சேர்ந்​தவர்​கள் இந்​தி​யா​வுக்கு வந்​தால் 24 மணி நேரத்​துக்​குள் பதிவு செய்து கொள்ள வேண்​டும். அவர்கள் தங்​கும் இடம், உள்​ளூர் தொடர்​பு​கள், இந்​தி​யா​வுக்கு வந்த நோக்​கம் உள்​ளிட்ட அனைத்து தகவல்​களை​யும் வழங்க வேண்​டும்.

அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் சட்​ட​விரோத​மாக குடியேறு​பவர்​களை தடுக்க குடியேற்ற வி​தி​கள் கடுமையாக்​கப்​பட்டு உள்​ளன. இதே​போல இந்​தி​யா​வும் கடுமை​யான வி​தி​களு​டன் புதிய சட்​டத்தை அமல்​படுத்​தி உள்ளது. இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.