அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை மத்திய அரசு ஓயாது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

புதுடெல்லி: அனைத்து நக்​சல்​களும் ஒழிக்​கப்​படும் வரை பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசு ஓயாது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​தார். சத்​தீஸ்​கர் மாநிலம் கர்​ரேகுட்டா மலை​யில் சிஆர்​பிஎப். வீரர்​கள், சத்​தீஸ்​கர் மாநில காவல்​துறை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை மற்​றும் கோப்ரா படை​யினர் இணைந்து நடத்​திய ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்’ நடவடிக்​கைக்கு அமைச்​சர் அமித் ஷா பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நடை​பெற்ற பாராட்டு விழா​வில் அவர் பேசி​ய​தாவது: ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்​டின் போது வீரர்​கள் வெளிப்​படுத்​திய துணிச்​சலும் வீர​மும் நக்​சல் எதிர்ப்பு நடவடிக்​கை​களின் வரலாற்​றில் ஒரு பொன்​னான அத்​தி​யாய​மாக நினை​வு​கூரப்​படும். தொடர்ச்​சி​யாக தீவிர​வா​தி​களின் அச்​சுறுத்​தல்​கள் இருந்​த​போ​தி​லும், பாது​காப்​புப் படை​யினர் மிகுந்த மன உறு​தி​யுடன் நடவடிக்​கையை மேற்​கொண்டு பெரிய நக்​சல் தள முகாமை வெற்​றிகர​மாக அழித்​தனர்.

கர்​ரேகுட்டா மலை​யில் நிறு​வப்​பட்ட நக்​சல்​களின் கிடங்​கு, விநி​யோகச் சங்​கி​லியை சத்​தீஸ்​கர் காவல்​துறை, சிஆர்​பிஎஃப், டிஆர்ஜி மற்​றும் கோப்ரா பணி​யாளர்​கள் வீரத்​துடன் அழித்​தது பாராட்​டுக்​குரியது. நாட்​டின் வளர்ச்​சி​யடை​யாத சில பகு​தி​களில் நக்​சல்​கள் கடுமை​யான சேதத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளனர். பள்​ளி​கள், மருத்​து​வ​மனை​கள் மற்​றும் அரசு நலத்​திட்​டங்​களை சீர்​குலைந்​துள்​ளனர். மேலும் அரசு நலத்​திட்​டங்​களுக்கு இடையூறு விளை​வித்​துள்​ளனர்.

தொடர்ச்​சி​யான நக்​சல் எதிர்ப்பு நடவடிக்​கைகள் காரண​மாக, பசுப​தி​நாத் முதல் திருப்​பதி வரையி​லான பகு​தி​யில் உள்ள சுமார் 6.5 கோடி மக்​களின் வாழ்க்​கை​யில் ஒரு ‘‘பு​திய சூரிய உதயம்’’ ஏற்​பட்​டுள்​ளது. நக்​சல் எதிர்ப்பு நடவடிக்​கை​களின் போது கடுமை​யான காயமடைந்த பாது​காப்​புப் பணி​யாளர்​களை ஆதரிக்க பிரதமர் மோடி தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் எடுத்து வரு​கிறது. அவர்​களின் வாழ்க்கை எளி​தாக்​கப்​படு​வதை அரசு உறுதி செய்​யும்.

வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் நாட்​டிலிருந்து நக்​சல்​வாதத்தை ஒழிக்க அரசு உறுதி பூண்​டுள்​ளது. அனைத்து நக்​சல்​களும் ஒழிக்​கப்​படும் வரை பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசு ஓயாது. பிரதமர் மோடி தலை​மையி​லான அரசாங்​கம், இந்​தி​யாவை நக்​சல் இல்​லாத நா​டாக மாற்ற உறுதி பூண்​டுள்​ளது என்​பதை தெரி​வித்​துக்​ கொள்​கிறேன். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

சத்தீஸ்கரில் 20 நக்சல்கள் சரண்:

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கிரண் சவாண் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுக்மாவில் 9 பெண்கள் உள்ளிட்ட 20 நக்சலைட்கள், போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 11 பேருக்கு மொத்தம் ரூ.33 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. நக்சலைட்களின் வலிமையான அமைப்பாக கருதப்படும் மக்கள் விடுதலை கெரில்லா ராணுவத்தின் (பிஎல்ஜிஏ) பட்டாலியன் 1-ன் முக்கிய நக்சலைட் ஒருவரும் சரண் அடைந்துள்ளார்.

வெற்று மாவோயிஸ்ட் சித்தாந்தம், அப்பாவி பழங்குடியினர் மீதான அட்டூழியங்கள் மற்றும் தங்கள் அமைப்புக்குள் வளர்ந்து வரும் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றால் ஏமாற்றம் அடைந்ததாக இவர்கள் கூறுகின்றனர். மேலும் சத்தீஸ்கர் அரசின் உங்கள் நல்ல கிராமம் திட்டத்தாலும் இவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். சரண் அடைந்த அனைத்து நக்சலைட்களுக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. அரசு கொள்கையின்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். இவ்வாறு கிரண் சவாண் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.