வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் படப்பிடிப்பு எதிர்நோக்கிக் காத்திருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’. பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் இப்படத்திற்காக வேலைகள் இன்னும் தொடங்கப்படாமலே இருக்கின்றன.
இதற்கிடையில் சிலம்பரசனை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன். வாடிவாசல், சிம்பு படம், வடசென்னை 2 என வெற்றி மாறனின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் எதிர்ப்புகளால் வரிசை கட்டி நிற்கின்றன.

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. சமீபத்திய இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் பேசுகையில், “வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்தும், வாடிவாசல் குறித்த அப்டேட் இன்னும் 10 நாட்களில் வெளியாகும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 6.02 மணிக்கு பெரிய அப்டேட் காத்திருப்பதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள். ▶️https://t.co/6QoXAEq9PL@SilambarasanTR_ #VetriMaaran #KalaippuliSThanu #RVelraj #STR49 #VCreations47 pic.twitter.com/ys4zbVBwux
— Kalaippuli S Thanu (@theVcreations) September 4, 2025
தற்போது தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் வலைத்தளத்தில், “வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள்” என வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘STR 49’ படத்தின் அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…