சென்னை: செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன் என முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். அதுபோல ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம். அதிமுக தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது என கூறி உள்ளார். அதிமுக மூத்த உறுப்பினர்களில் ஒருவரான செங்கோட்டையன், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று […]
