நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு

அபுஜா: மேற்கு ஆப்​பிரிக்​கா​வின் முக்​கிய நதி​யான நைஜர், நைஜீரியா உள்​ளிட்ட நாடு​கள் வழி​யாக பாய்ந்து அட்​லாண்​டிக் பெருங்​கடலில் கலக்​கிறது. இந்​நிலை​யில் நைஜீரி​யா​வின் வடக்கு நைஜர் மாநிலம் போர்கு பகு​தி​யில் இந்த ஆற்​றில் சுமார் 90 பேருடன் ஒரு படகு சென்று கொண்​டிருந்​தது. இந்​தப் படகு நேற்று காலை​யில் ஒரு மரத்​தின் அடிப்​பகு​தி​யில் மோதி கவிழ்ந்​தது.

இந்த விபத்​தில் 32 பேர் பேர் உயி​ரிழந்​தனர், 50-க்​கும் மேற்​பட்​டோர் மீட்​கப்​பட்​டனர், 8 பேரை காண​வில்லை. நைஜீரி​யா​வின் தொலை​தூரப் பகு​தி​களில் மழைக்​காலங்​களில் படகு விபத்​துகள் அடிக்​கடி நிகழ்​கின்​றன. படகு​கள் பராமரிப்​பின்மை மற்​றும் அதிக சுமை காரண​மாக விபத்​துகள் நிகழ்​கின்​றன. நைஜீரி​யா​வின் வடமேற்கு சோகோட்டோ மாநிலத்​தில் கடந்த மாதம் ஒரு ஆற்​றில் படகு கவிழ்ந்த விபத்​தில் 25 பேரை காண​வில்லை என அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.