வாஷிங்டன்,
செப்லி அமெரிக்காவின் முன் னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இங்கிலாந்து மஊடகத்துக்கு அளித் துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்புக்கும். இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்தது. அது இப்போது முடித்து விட்டது என நான் நினைக்கிறேன். அனைவருக்கும் ஒரு பாடம். உதாரணமாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு இது ஒரு பெரிய பாடம்.
டிரம்பை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். ஒரு நல்ல தனிப்பட்ட உறவு சில சமயங்களில் உதவக் கூடும். ஆனால் அது உங்களை மோசமானவற்றில் இருந்து பாதுகாக்காது. அரசு உறவு வேறு. ராஜங்க உறவு வேறு. தனிப்பட்ட நட்பு என்பது வேறு. அதனால் தான் அவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது.
டிரம்ப சர்வதேச உறவு களை தலைவர்களுடனான தனது தனிப்பட்ட உறவுகளின் கண்ணோட்டத்தில் உலக அரசியலை பார்க்கிறார் என்று நான் நினைக்கிறேன். எனவே அவருக்கு புதினுடன் நல்ல உறவு இருந்தால் அமெரிக்காவுக்கு ரஷியாவுடன் நல்ல உறவு இருக்கிறது என்று கருதுகிறார். அவர்
சஸ்டனில் நடந்த ஹவுடி மோடி பேரணி முதல் அரசு வருகைகள் வரை தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த மோடி- டிரம்ப் இடையேயான உறவுகள் இப்போது மோசமாகி உள்ளது. நாட்டு உறவு மோசமான நிலையை அடைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக போர் நீடித்து வரும் சூழ்நிலையில் ஜான் போல்டன் இந்த கருத்தை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.