மைதேயி, குகி குழுக்கள், மத்திய அரசு இடையே சுமுக உடன்பாடு: மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புகிறது

இம்பால்: மைதே​யி, குகி குழுக்​கள் மற்​றும் மத்​திய அரசு இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உள்​ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்​சாலையை திறக்க குகி நிர்​வாகக் குழு ஒப்​புக் கொண்​டுள்​ளது. அந்த மாநிலத்​தில் விரை​வில் அமைதி திரும்​பும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்​பூரில் மைதே​யி, குகி சமு​தா​யத்​தினர் இடையே மோதல் ஏற்​பட்​டது. மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்து 258 பேர் உயி​ரிழந்​தனர்.

1,108 பேர் காயமடைந்​தனர். 400 தேவால​யங்​கள், 132 இந்து கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. சுமார் 60,000-க்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர். கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக மணிப்​பூரில் வன்​முறை நீடித்து வரு​கிறது. வரும் 13-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி மணிப்​பூர் மாநிலத்​துக்கு செல்ல இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இந்த சூழலில் குகி சமு​தா​யத்​தின் நிர்​வாக குழு​வான குகி சோ கவுன்​சில், மைதேயி சமு​தா​யத்​தின் நிர்​வாக குழு​வான ஐக்​கிய மக்கள் முன்​னணி ஆகிய​வற்​றின் மூத்த நிர்​வாகி​களு​டன் மத்​திய உள்​துறை அமைச்சக மூத்த அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டது.

இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மணிப்​பூரில் குகி சமு​தாயத்தின் தலைமை அமைப்​பான குகி சோ கவுன்​சில், மைதேயி சமு​தா​யத்தை சேர்ந்த நிர்​வாக அமைப்​பான ஐக்​கிய மக்​கள் முன்​னணி​யின் மூத்த நிர்​வாகி​களு​டன் மத்​திய உள்​துறை அமைச்சக மூத்த அதி​காரி​கள் கடந்த சில நாட்​களாக டெல்​லி​யில் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டது.

இதன்​படி தேசிய நெடுஞ்​சாலை 2-ஐ திறக்க குகி சோ கவுன்​சில் ஒப்​புக் கொண்​டிருக்​கிறது. இதன்​மூலம் மணிப்​பூரில் தடையற்ற வர்த்தக போக்​கு​வரத்து தொடங்​கும். தேசிய நெடுஞ்​சாலை 2-ல் பணி​யாற்​றும் பாது​காப்​புப் படை வீரர்​களுக்கு குகி சோ கவுன்​சில் முழு ஒத்​துழைப்பு வழங்​கும். குகி சோ கவுன்​சில், ஐக்​கிய மக்​கள் முன்​னணி, மத்​திய அரசு இடையே முத்​தரப்பு அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இதன்​படி மணிப்​பூரில் அமை​தியை நிலை நாட்ட அனைத்து தரப்​பினரும் உறுதி அளித்​துள்​ளனர்.

கிளர்ச்​சிக் குழுக்​களிடம் இருக்​கும் ஆயுதங்​களை அரு​கில் உள்ள சிஆர்​பிஎப், பிஎஸ்​எப் முகாம்​களில் ஒப்​படைக்க உத்​தர​விடப்​பட்டு உள்​ளது. மணிப்​பூரில் சில வெளி​நாட்​டினர் ஊடுருவி சட்​டம் ஒழுங்கை சீர்​குலைக்​கும் வகை​யில் செயல்​பட்டு வரு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன. அவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். கிளர்ச்​சிக் குழுக்​களின் முகாம்​கள் மூடப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்டு உள்​ளது.

மணிப்​பூர் போலீஸ் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: மணிப்​பூரின் பள்​ளத்​தாக்கு பகு​தி​களில் மைதேயி சமு​தாய மக்​கள் பெரும்​பான்​மை​யாக வசிக்​கின்​றனர். மலைப் பகு​தி​களில் குகிசமு​தாய மக்​கள் பெரும்​பான்​மை​யாக உள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு மோதலுக்கு பிறகு இரு சமு​தாய மக்​களும் எதிரெ​திர் அணி​களாக செயல்​பட்​டனர்.

எனவே மத்​திய அரசு சார்​பில் இரு தரப்​பினருடனு​ம் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உள்​ளது. முதல்​கட்​ட​மாக மைதே​யி, குகி, மத்​திய அரசு இடையே அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்​தப்​பட்டு உள்​ளது. மணிப்​பூரில் விரை​வில்​ அமை​தி திரும்​பும்​. இவ்​வாறு அந்த​ வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

நாகா அமைப்பு: வர்த்தக தடை

இந்தியா – மியான்மர் சர்வதேச எல்லையில், நாட்டின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு வேலி அமைத்து வருகிறது. மேலும் இருநாட்டு எல்லையில் விசா இல்லாமல் 16 கி.மீ. தூரம் பயணிக்கும் சுதந்திர நடமாட்ட ஒப்பந்தத்தை (எப்எம்ஆர்) ரத்து செய்வது குறித்தும் பரிசீலித்து வருகிறது. இவ்விரு நடவடிக்கைகளுக்கும் மணிப்பூர் நாகா பழங்குடியின அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனால் தங்கள் இன மற்றும் குடும்ப உறவுகள் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் எல்லை வேலி மற்றும் எப்எம்ஆர் ரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மணிப்பூரில் தங்கள் சமூகத்தினர் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் செப்டம்பர் 8 முதல் வர்த்தக தடை அமல்படுத்தப்படும், தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கான தடையும் இதில் அடங்கும் என்று ஐக்கிய நாகா கவுன்சில் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.