செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, “அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று கறாராகப் பேசியிருக்கிறார்.
சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் ‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என்ற இதே கருத்தை கூறிவரும் நிலையில், செங்கோட்டையனும் இதை வழிமொழிந்து பேசியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து இன்று செங்கோட்டையன் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும், அத்துடன் அவரது ஆதரவாளர்களான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது அதிமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்துப் பேசியிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக இரண்டு மூன்று அணிகளாகப் பிரிந்த பிறகு எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது. ‘இது அதிமுகவிற்கு தேவைதானா?’ என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது. பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எல்லோரின் எண்ணம்.

அதிமுக தொண்டர்கள், மக்கள் மனதில் இருப்பதைத்தான் மூத்த தலைவர் என்ற பொறுப்புடன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று எடுத்துச் சொல்லியிருந்தார். கட்சியின் நலனுக்காகப் பேசியவரை நீக்கம் செய்திருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். அதிமுக ஒன்றிணைந்து 2026 தேர்தலை சந்திக்கும். அதற்காக விடாமுயற்சியுடன் போராடுவோம்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs