India PLan to give Rest for Jasprit Bumrah: 2025 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, யுஏஇ, ஹாங்காங், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியை வரும் புதன்கிழமை அதாவது இரண்டாவது லீக் ஆட்டத்தில் யுஏஇ அணிக்கு எதிராக விளையாடுகிறது.
Add Zee News as a Preferred Source
முக்கிய வீரர்கள் ஓய்வு வாங்கும் திட்டம்?
இந்த நிலையில், இந்திய அணியை ஒப்பிடும்போது யுஏஇ அணியின் பலம் குறைவாக காணப்படுவதால், இந்திய அணியில் ஒரு முக்கிய வீரருக்கு ஓய்வு அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்து, ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களை பயன்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால், இந்த முடிவை பல கிரிக்கெட் வல்லுநர்கள் எதிர்க்கின்றனர். ஏனெனில் பும்ரா குறிப்பாக, கடந்த டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, சர்வதேச போட்டிகளில் சுமார் 45 நாட்களுக்கும் மேலாக விளையாடவில்லை. இந்நிலையில் அவர் நேரடியாக அதிக அழுத்தப் போட்டியான பாகிஸ்தான் (செப் 14) போன்று மிகப்பெரும் போட்டியில் களமிறங்கினால் தடுமாறும் அபாயம் ஏற்படும் என்றும் கவலை வெளிப்படுத்தி உள்ளனர்.
யுஏஇ ஓர் பயிற்சி போட்டியாக பயன்படுத்தலாம்
அதனால், UAE போன்ற குறைந்த அழுத்தம் கொண்ட லீக் ஆட்டங்களில் சீனியர்கள் யாரும் ஓய்வு பெறாமல், தங்கள் match fitness-ஐ பறைசாற்றும் வகையில் பங்கேற்க வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அதனை தகுந்த பயிற்சி வாய்ப்பாக பயன்படுத்துவதன் மூலம், பாகிஸ்தான் போன்ற முக்கிய போட்டிகளில் தீவிரமாக களமிறங்கலாம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய அணித் தரவு
– கேப்டன்: சூர்யகுமார் யாதவ்
– துணைக் கேப்டன்: சுப்மன் கில்
– முக்கிய வீரர்களாக ஹர்திக் பாண்டியா, அபிஷேக், அக்சர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டவர்களும் உள்ளனர்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மான் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விகீ.), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விகீ), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
About the Author
R Balaji