இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் பஜாவூர் மாவட்டத்தில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சக்திவாய்ந்த குண்டு மைதானத்தில் வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் மூலம் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதை பஜாவூர் மாவட்ட காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார். தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இந்த தாக்குதல் பயங்கரவாதிகளின் செயல் தான் என்று அங்குள்ள போலீசார் தெரிவித்துள்ளனர். மைதானத்தில் குண்டு வெடிப்பு நடந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.