ஹராரே,
இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன மருமணி சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து வலு சேர்த்தார். அவர் 51 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்களில் சீன் வில்லியம்ஸ் (23 ரன்கள்), சிக்கந்தர் ராசா (28 ரன்கள்), ரையன் பர்ல் (26 ரன்கள்) ஆகியோரும் ஒரளவு ரன் அடிக்க ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக துஷான் ஹேமந்தா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இலங்கை பேட்டிங் செய்து வருகிறது.