ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் கிராண்ட் ஐ10 நியோஸ் முதல் டூஸான் வரை புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலியால் ரூ.60,640 முதல் ரூ.2,40,303 வரை விலை குறைய உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி சிறிய ரக கார்களுக்கு 18 % மற்றவைகளுக்கு 40 % ஆக மாற்றப்பட்டுள்ளதால் பெரும்பாலான மாடல்கள் விலை குறைய துவங்கியுள்ளது. ஏற்கனவே டாடா, மஹிந்திரா, ரெனால்ட், டொயோட்டா, ஜாவா யெஸ்டி என பல நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பின் காரணமாக அதிகபட்ச விலை குறைப்பு இந்நிறுவனத்தின் டூஸான் எஸ்யூவி விலை ரூ.2.40 லட்சம் வரை குறைய உள்ளது, அடுத்து வெர்னா செடானுக்கு 60,640 ரூபாய் குறைய உள்ளது.
பிரசத்தி பெற்ற க்ரெட்டா எஸ்யூவி விலை ரூ.72,145 மற்றும் க்ரெட்டா என்-லைன் ரூ.71,762 ஆகவும், 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற வெனியூ மற்றும் வெனியூ என்-லைன் முறையே ரூ.1,23,659 முதல் ரூ.1,19,390 வரை குறைய உள்ளது.
விலைக் குறைப்பு அட்டவனை பின்வருமாறு;-
Model | Price Reduction up to INR |
---|---|
Nios | 73,808 |
AURA | 78,465 |
EXTER | 89,209 |
i20 | 98,053 |
i20 N Line | 1,08,116 |
VENUE | 1,23,659 |
VENUE N Line | 1,19,390 |
VERNA | 60,640 |
CRETA | 72,145 |
CRETA N Line | 71,762 |
ALCAZAR | 75,376 |
TUCSON | 2,40,303 |
முழுமையான விலைப் பட்டியல் விரைவில் இணையதளத்தில் பதிவேற்றப்பட உள்ள நிலையில் விலை குறைப்பு செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.