Tata Bus, Trucks and prickups GST price – ஏஸ் முதல் பிரைமா வரை டாடா வர்த்தக வாகனங்கள் விலை குறைப்பு

டாடா மோட்டார்சின் சிறிய ரக டிரக்குகள் 750kg முதல் 55 டன் வரை உள்ள டிரக்குகள், பேருந்துகள், வேன், பிக்கப் டிரக்குகள் என அனைத்தும் விலை ரூ.30,000 முதல் ரூ.4,65,000 வரை ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதை தொடர்ந்து செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே டாடா தனது கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கு விலை குறைப்பை அறிவித்துள்ள நிலையில், தனது வர்த்தக வாகனங்களுக்கும் அறிவித்துள்ளது. மேலும் தனது பிரீமியம் ஜேஎல்ஆர் ஆடம்பர கார்களுக்கும் அறிவிக்க உள்ளது.

Product Reduction
HCV from ₹ 2,80,000 to ₹ 4,65,000
ILMCV from ₹ 1,00,000 to ₹ 3,00,000
Buses & Vans from ₹ 1,20,000 to ₹ 4,35,000
SCV Passenger from ₹ 52,000 to₹ 66,000
SCV & Pickups from₹ 30,000 to ₹ 1,10,000

 

  • குறிப்பாக டாடா ஏஎஸ், இன்ட்ரா, யோதா மற்றும் பிக்கப் வரிசைகள் விலை ரூ.30,000 முதல் ரூ.1,10,000 லட்சம் வரை குறைகின்றது.
  • டாடா மேஜிக் வரிசை ரூ.52,000 முதல் ரூ.66,000 வரை குறைய உள்ளது.
  • விங்கர் வேன் உட்பட ஸ்டார்பஸ், சிட்டிரைட், LP என அனைத்தும் ரூ.1,20,000 முதல் ரூ.4,35,000 வரை குறைய உள்ளது.
  • LPT, அல்டரா டிரக்குகள் வரிசை விலை ரூ. 1,00,000 முதல் ரூ.3,00,000 வரை குறைய உள்ளது.
  • மேலும் Signa, Prima போன்றவை ரூ.2,80,000 முதல் ரூ.4,65,000 வரை குறைக்கப்பட உள்ளது.

முன்பாக வர்த்தக வாகங்களுக்கான ஜிஎஸ்டி 28% ஆக இருந்த நிலையில் தற்பொழுது 18 % ஆக மாற்றப்பட்டுள்ளது.


tata intra v70, intra v20 bifuel and ace ht+tata intra v70, intra v20 bifuel and ace ht+

டாடா மோட்டார்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. கிரிஷ் வாக், “வணிக வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை 18%  குறைப்பது இந்தியாவின் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு புத்துயிர் பெறுவதற்கான ஒரு துணிச்சலான மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என குறிப்பிட்டார்.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.