நாளை (செப்டம்பர் 9) அன்று ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கும் ஆசியக் கோப்பை 2025 டி20 தொடரில், சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி போட்டியிடுகிறது. இந்நிலையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என கூறப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
நீண்ட காலமாக மிடில் ஆர்டரில் தடுமாறி வந்த சஞ்சு சாம்சனுக்கு, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஓப்பனிங்கில் விளையாட வாய்ப்பு அளித்தார். அந்த வாய்ப்பில் அவர் 3 சதங்கள் அடித்து இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் தற்போது, சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அர்ப்பணிப்புடன் 754 ரன்கள் அடித்த சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே, கம்பீர் சுப்மன் கில்லை அபிஷேக் ஷர்மா உடன் ஓப்பனிங்கில் விளையாட வைப்பார் என்று நம்பப்படுகிறது.
திலக் வர்மா மற்றும் கேப்டன் சூரியகுமார் 3, 4வது இடங்களில், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ரிங், துபே ஆகியோர் 6, 7வது இடங்களிலும் விளையாட வாய்ப்பு உள்ளது. மிடில் ஆர்டரில் தடுமாறிய சஞ்சு சாம்சனுக்கு பதிலாக, 2025 ஐபிஎல் வெற்றியாளராகிய ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக இப்போது வாய்ப்பு பெறலாம்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது சஞ்சு சாம்சன் டாப் 3 இடங்களில் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன். அதனால், அவரை அந்த இடங்களில் விளையாட விட வேண்டும்; அவருடைய இடத்தை சுப்மன் கில் எளிதாக நிரப்ப முடியாது என்று எச்சரித்துள்ளார்.
ரவி சாஸ்திரி கூறியதாவது “சஞ்சு சாம்சனை டாப் ஆர்டரில் வைத்தால் இந்தியா அணி வெற்றியைப் பெறும். சுப்மன் கில் வேறு இடத்தில் விளையாடலாம். ஆனால் சஞ்சு சாம்சன் ஓப்பனராக தொடர்ந்து விளையாட வேண்டும். அவரது திறனும் தொடர்ச்சியான சிறப்பும் இந்திய டி20 அணிக்கு பெருமை சேர்ப்பவை” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
About the Author
R Balaji