ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்ட்ர்+ முதல் எக்ஸ்ட்ரீம் 250 வரை உள்ள மாடல்களுக்கு ரூ.5,805 முதல் அதிகபட்சமாக ரூ.15,743 வரை விலை குறைக்கப்பட உள்ளது. குறிப்பாக ஸ்பிளெண்டர்+ பைக்குகளுக்கு அதிகபட்சமாக ரூ.6,820 வரை குறைய உள்ளது.
Hero GST price cut list
குறிப்பாக ஹீரோ நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் 350சிசிக்கு குறைந்த திறனை பெற்றிருக்கின்றது. மேலும் ஹீரோ-ஹார்லி-டேவிட்சன் கூட்டணியின் மேவ்ரிக் 440 தவிர அனைத்தும் 18% வரிக்கு மாறியுள்ளது. அதிகபட்ச விலை குறைப்பை கரீஸ்மா 210 மற்றும் எக்ஸ்பல்ஸ் 210 அட்வென்ச்சர் பெற்றுள்ளது.
மேக்ஸி ஸ்டைல் ஜூம் 160 ஸ்கூட்டரின் விலை ரூ.11,602 வரை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பிளெஷர் பிளஸ், டெஸ்டினி 125 போன்றவை விலையும் குறைந்துள்ளது.
Model | Max GST Benefit (Ex-Showroom Delhi) |
---|---|
Destini 125 | Up to ₹ 7,197 |
Glamour X | Up to ₹ 7,813 |
HF Deluxe | Up to ₹ 5,805 |
Karizma 210 | Up to ₹ 15,743 |
Passion+ | Up to ₹ 6,500 |
Pleasure+ | Up to ₹ 6,417 |
Splendor+ | Up to ₹ 6,820 |
Super Splendor XTEC | Up to ₹ 7,254 |
Xoom 110 | Up to ₹ 6,597 |
Xoom 125 | Up to ₹ 7,291 |
Xoom 160 | Up to ₹ 11,602 |
Xpulse 210 | Up to ₹ 14,516 |
XTREME 125R | Up to ₹ 8,010 |
Xtreme 160R 4V | Up to ₹ 10,985 |
Xtreme 250R | Up to ₹ 14,055 |