ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 350cc வரிசையில் உள்ள கிளாசிக் 350, புல்லட் 350, மீட்டியோர் 350, ஹண்டர் 350 மற்றும் கோன் கிளாசிக் 350 போன்வற்றின் டாப் வேரியண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.22,000 வரை ஜிஎஸ்டி 18% ஆக மாற்றப்பட்டுள்ளதால் குறைக்கப்பட்டுள்ளது.
“இந்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தம் 350 சிசிக்கு கீழ் உள்ள மோட்டார் சைக்கிள்களை பலரும் இலகுவாக வாங்குவது மட்டுமல்லாமல், முதல் முறையாக வாங்குபவர்களையும் உற்சாகப்படுத்தும்” என்று ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநரும் ராயல் என்ஃபீல்டின் தலைமை நிர்வாக அதிகாரியுமான பி. கோவிந்தராஜன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Updated Royal Enfield 350cc Ex-Showroom Price (After GST 2.0 Price Cut)
Motorcycle Model | Variant Name | Ex-Showroom Price (Delhi) | New Price (18% GST) | GST Benefits |
Classic 350 | Redditch | ₹1,97,253 | ₹1,81,387 | ₹15,866 |
Halcyon | ₹2,00,157 | ₹1,84,077 | ₹16,080 | |
Heritage | ₹2,03,813 | ₹1,87,489 | ₹16,324 | |
Heritage Premium | ₹2,08,415 | ₹1,91,723 | ₹16,692 | |
Signals | ₹2,20,669 | ₹2,03,040 | ₹17,629 | |
Dark | ₹2,29,866 | ₹2,11,489 | ₹18,377 | |
Chrome | ₹2,34,972 | ₹2,16,196 | ₹18,776 | |
Hunter 350 | Retro (Factory) | ₹1,49,900 | ₹1,37,846 | ₹12,054 |
Metro (Dapper) | ₹1,69,656 | ₹1,56,128 | ₹13,528 | |
Metro (Rebel) | ₹1,74,655 | ₹1,60,738 | ₹13,917 | |
Meteor 350 | Fireball | ₹2,08,270 | ₹1,91,590 | ₹16,680 |
Stellar | ₹2,18,385 | ₹2,00,929 | ₹17,456 | |
Aurora | ₹2,22,430 | ₹2,04,635 | ₹17,795 | |
Supernova | ₹2,32,545 | ₹2,13,974 | ₹18,571 | |
Bullet 350 | Battalion Black | ₹1,74,730 | ₹1,60,808 | ₹13,922 |
Military Red / Military Black | ₹1,77,316 | ₹1,63,161 | ₹14,155 | |
Standard Maroon / Standard Black | ₹2,01,707 | ₹1,85,532 | ₹16,175 | |
Black Gold | ₹2,20,466 | ₹2,02,878 | ₹17,588 | |
Goan Classic 350 | Single Tone | ₹2,37,351 | ₹2,18,294 | ₹19,057 |
Dual Tone | ₹2,40,381 | ₹2,21,098 | ₹19,283 |
குறிப்பாக ஹண்டர் இந்நிறுவனத்தின் குறைந்த விலை ரூ.1.38 லட்சத்தில் துவங்குவதுடன் கிளாசிக் 350 ரூ.1.75 லட்சத்தில் துவங்கலாம். குறிப்பாக புல்லட் 350 மாடலின் விலை ரூ.1.55 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ விலை பட்டியல் செப்டம்பர் 22ஆம் தேதி வெளிவரவுள்ளது.
ஆனால் இந்நிறுவனத்தின் 450cc ஹிமாலயன், கொரில்லா, ஸ்கிராம் 440 ஆகியவற்றுடன் 650சிசி வரிசையில் உள்ள பியர் 650, இன்டர்செப்டார் 650, கான்டினென்டினல் ஜிடி, கிளாசிக் 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 ஆகியவை 40% ஜிஎஸ்டி வரியாக மாற்றப்பட்டுள்ளதால் ரூ.25,000 முதல் ரூ.45,000 வரை விலை உயரக்கூடும்.