வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டையை பதிவிறக்குவது எப்படி? எளிய செயல்முறை இதோ

UIDAI Aadhaar Latest News: ஆதார் அட்டை இந்தியாவில் மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு ஆவணமாக உள்ளது. இது சரிபார்ப்பு ஆவணமாகவும், நிதி பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல் மற்றும் அரசு சேவைகளுக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆவணங்களில் ஒன்றாகும். 

Add Zee News as a Preferred Source

ஆதார் அட்டை

ஆதார் அட்டை பல இடங்களில் பயன்படுத்தப்படாலும், அதை அனைத்து இடங்களுக்கும் எப்போதும் எடுத்துச் செல்வது சாத்தியமில்லை. ஆகையால், இதன் சாஃப்ட் காப்பியை உடன் வைத்திருப்பது உகந்ததாக கருதப்படுகின்றது. உங்கள் ஸ்மார்ட்போனில் ஆதார் அட்டையின் சாஃப்ட் காப்பியை வைத்துக்கொள்ளலாம். எனினும், மொபைல் போனில் இது இருந்தாலும், பல சமயங்களில் பலர் அதை தற்செயலாக நீக்கிவிடுகிறார்கள், அதாவது டெலீட் செய்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால், அது சிக்கலைத் தீர்க்கும்.

Aadhaar Card: வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டை

வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டையைப் பதிவிறக்குவதற்கு முன், நீங்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். 

– ஆதாருடன் இணைக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இருக்க வேண்டும்.

– உங்கள் தொலைபேசியில் அதிகாரப்பூர்வ MyGov Helpdesk WhatsApp எண் சேவ் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

– அதைத் தவிர, உங்களிடம் செயலில் உள்ள DigiLocker கணக்கு இருக்க வேண்டும். 

– உங்களிடம் DigiLocker கணக்கு இல்லையென்றால், DigiLocker வலைத்தளம் அல்லது செயலியின் மூலம் அதை உருவாக்கலாம்.

வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டையைப் பதிவிறக்குவது மிகவும் எளிது, அதைச் செய்ய நீங்கள் சில செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும். வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டையைப் பதிவிறக்குவதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.

– உங்கள் காண்டாக்டுகளில் ‘MyGov Helpdesk’ -இன் WhatsApp எண் சேவ் செய்யப்படுள்ளதா என்பதை செக் செய்யவும்.

– சேவ் செய்யப்பட்டிருக்கவில்லை என்றால், உங்கள் தொடர்புகளில் +91-9013151515 ஐ ‘MyGov Helpdesk’ என்ற பெயரில் சேவ் செய்யலாம்.

– வாட்ஸ்அப்பைத் திறந்து ‘MyGov Helpdesk’ உடன் ஒரு சேட்டை தொடங்கவும்.

– சேட்டை தொடங்க Hi/Namaste என டைப் செய்யவும். 

-‘‘DigiLocker Services’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

– உங்களிடம் DigiLocker கணக்கு உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும். இல்லையென்றால் ஒன்றை உருவாக்கவும்.

– அங்கீகாரத்திற்காக ஆதார் எண்ணை உள்ளிடவும். வேலிடேஷனுக்குப் பிறகு, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெறுவீர்கள்.

– சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் DigiLocker இல் கிடைக்கும் அனைத்து ஆவணங்களையும் சாட்பாட் காண்பிக்கும்.

– பட்டியலில் இருந்து ஆதாரைத் தேர்ந்தெடுத்து எண்ணை உள்ளிடவும்.

– உங்கள் ஆதார் அட்டை PDF வடிவத்தில் WhatsApp சேட்டில் சில நொடிகளில் கிடைக்கும்.

About the Author


Sripriya Sambathkumar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.