Asic Cup Points Table: ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வாரம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சில போட்டிகளின் முடிவில், நடப்பு சாம்பியனான இந்திய அணி புள்ளி பட்டியலில் குரூப் A பிரிவில் முதலிடத்தை பிடித்து, தொடரை மிக சிறப்பாக தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான முதல் போட்டியில் பெற்ற இமாலய வெற்றியே, இந்தியாவின் நெட் ரன் ரேட் உயர காரணமாக அமைத்துள்ளது.
Add Zee News as a Preferred Source
இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்
துபாயில் நடைபெற்ற இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான போட்டியில், முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் 3 ஓவர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய இந்தியா 4.3 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் ஆப்கானிஸ்தான் vs ஹாங்காங் விளையாடிய தொடரின் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி, வலுவான தொடக்கத்தை பதிவு செய்தது.
A dominating show with the bat!
A wicket win for #TeamIndia after chasing down the target in 4.3 overs.
Scorecard https://t.co/Bmq1j2LGnG#AsiaCup2025 | #INDvUAE pic.twitter.com/ruZJ4mvOIV
— BCCI (@BCCI) September 10, 2025
தங்களது இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணி, வங்கதேசத்திடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம், ஹாங்காங் அணி ‘சூப்பர் 4’ சுற்றுக்கான தகுதியை இழந்து, தொடரிலிருந்து வெளியேறியது. இன்றும் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் விளையாடுகின்றன. பாகிஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் இந்தியாவின் நெட் ரன் ரேட்டை தொட முடியாது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும்.
புள்ளி பட்டியல் நிலவரம்
குரூப் ஏ: இந்திய அணி பெற்ற அபார வெற்றியின் காரணமாக +10.483 என்ற மிக உயர்ந்த நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் இன்று தங்கள் முதல் போட்டியில் விளையாடுகின்றன.
குரூப் பி: ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளுமே தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளன. ஆனால், +4.700 என்ற சிறந்த நெட் ரன் ரேட்காரணமாக ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. ஹாங்காங் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அடுத்ததாக, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, செப்டம்பர் 14-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கு இன்னும் டிக்கெட் விற்பனை ஆகவில்லை என்று கூறப்பட்டாலும், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் உள்ளது.
About the Author
RK Spark