Nano Banana Trend: கடந்த சில நாள்களாகவே இன்ஸ்டாகிராம், X, பேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது, Nano Banana. ஒருவரின் புகைப்படத்தை 3D மினியேச்சர் வடிவத்தில் காட்டும் வகையிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பதிவேற்றப்பட்டு வருவதை நீங்கள் பார்த்தீருப்பீர்கள்.
Add Zee News as a Preferred Source
Nano Banana என்றால் என்ன?
Google Gemini மூலம் எடிட் செய்யப்படும் அல்லது உருவாக்கப்படும் மினியேச்சர் போன்ற புகைப்படங்கள்தான் Nano Banana டிரெண்ட் எனலாம். Google Gemini 2.5 Flash Image Tool மூலம் நீங்கள் இந்த புகைப்படத்தை உருவாக்கலாம். இதில் உங்களின் முக பாவனை, உடை போன்ற அனைத்து விஷயங்களும் நுணக்கமான விவரங்களுடன் டிஜிட்டல் வடிவத்தில் இடம்பெறும்.
அதாவது, ஒரு புகைப்படத்தை கொடுத்தால், அந்த புகைப்படத்தில் உள்ள நபர்கள் அப்படியே ஒரு பொம்மையை போல Gemini உருவாக்கும். இந்த படங்களை நீங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றிக்கொள்ளலாம். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவிகள் வரை இப்போது அனைவருமே இந்த Nano Banana டிரெண்டில் சேர்ந்து தங்களின் 3D டிஜிட்டல் மினியேச்சர் வடிவத்தையும், புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.
Nano Banana: கவனிக்க வேண்டிய விஷயங்கள்
Google Gemini தளத்தில் நீங்கள் உங்களின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். தேவைப்பட்டால் உங்களின் தேவைக் குறித்தும் விவரிக்கலாம். உங்கள் புகைப்படத்தை Nano Banana மாடலாக மாற்றலாம்.
குறிப்பாக, அது AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதே உங்களுக்கு தெரியாதது போல் இருக்கும். ஒரு மேசை, மேசையில் ஒரு கணினி, அந்த கணினியில் உங்கள் புகைப்படம் என உயர் தரத்தில் இருக்கும்.
இது Gemini மற்றும் Gemini Studio பயனர்களுக்கு இலவசம். இதற்காக உங்களுக்கு தனித்திறன் ஏதும் தேவையே இல்லை. நல்ல புகைப்படம் ஒன்றும், Nano Banana மாடலை உருவாக்க விரிவான மற்றும் நல்ல Prompt இருந்தால் போதுமானது. Prompt-ஐ கூட நீங்களே AI உதவியுடன் தயார் செய்துகொள்ளலாம். Ghibli Art புகைப்படத்தை உருவாக்கியது போன்றுதான் நீங்களே உங்கள் தேவைக்கேற்ப மாற்றங்களை செய்யலாம்.
இந்த டிரெண்ட் காட்டுத்தீப் போல் பரவி உள்ளது. இந்த அம்சம் தொடங்கப்பட்டது முதல் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் Gemini செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர். இதுவரை சுமார் 20 கோடிக்கும் அதிகமாக புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன அல்லது உருவாக்கப்பட்டுள்ளன எனலாம்.
Nano Banana டிரெண்டானது ஏன்?
நமது புகைப்படங்கள் சிறு மினியேச்சர் பொம்மை போன்று மாறுவது அனைவருக்குமே பிடித்தமானதுதான். அதனால்தான் Nano Banana அதிகமாக டிரெண்டாகி உள்ளது. அதுவும் சமூக வலைதள பிரபலங்கள், நெட்டிசன்கள், நட்சத்திரங்கள் இதுசார்ந்து புகைப்படங்களை வெளியிட தொடங்கியதும் பொதுமக்களுக்கும் இது மிகவும் பிடித்துவிட்டது. மேலும், தற்போதைய டிரெண்டில் நாமும் இருக்க வேண்டும், தொழில்நுட்ப ரீதியான தகவலில் நாம் பின்தங்கிவிடக் கூடாது என்பதாலும் இது அதிகம் டிரெண்டாகிறது
இதை செய்வது மிக எளிது என்பதாலும், இலவசம் என்பதாலும் இது மிகப்பெரிய டிரெண்டாகிவிட்டது. நீங்களும் உங்களை, உங்களுக்கு மனதுக்கு நெருக்கமானவர்களை, உங்களது செல்லப்பிராணியை, காரை, பைக்கை, உங்களுக்கு பிடித்த எதை வேண்டுமானாலும் Google Gemini 2.5 Flash மூலம் நீங்கள் Nano Banana மாடலாக மாற்றிக்கொள்ளலாம்.