சென்னை: சென்னை கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்தை ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சமீபத்தில் திருடுபோனது. இந்த சம்பவம் பேருந்து பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது. சென்னை டூ திருப்பதி இயக்கப்படும் இந்த அரசு பேருந்து பட்டப்பகலில் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையில் சம்பவத்தன்று மாலை புகார் அளிக்கப்பட்டது. […]
