நேபாளம் வீதிகளில் தூய்மை பணியில் ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் தீவிரம்!

காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்த நிலையில், தற்போது ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் காத்மாண்டுவில் தெருக்களை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல் மற்றும் சிதைந்த சுவர்களில் மீண்டும் வண்ணம் தீட்டுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், துடைப்பங்கள் மற்றும் கழிவுகளை சேகரிக்கும் பைகளுடன் ஜென் ஸீ இளைஞர்கள் நேபாள தலைநகர் முழுவதும் நடைபாதைகளைத் சுத்தம் செய்து குப்பைகளைச் சேகரிக்கின்றனர். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் குளிர்சாதன பெட்டிகள், மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் மின்விசிறிகளை திருப்பிக் கொண்டு தரும் பணியிலும் இறங்கியுள்ளனர்.

இது குறித்து போராட்டக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த தூய்மைப் பணி ஜென் ஸீ குழுவினரின் குடிமைப் பொறுப்பைக் காட்டுகிறது. அவர்களின் போராட்டம் மறுகட்டமைப்பையும் நோக்கமாகக் கொண்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேபாளத்தில் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆலோசனையில் நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல் முக்கியப் பங்காற்றி வருகிறார். நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதமாக ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்க சுசிலா கார்கியும் சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பின்னணி என்ன? – நேபாளத்தில் அண்​மை​யில் ‘நெப்போ பேபி’ என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது அந்நாட்டு அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வந்​தனர். இதன் எதிர்​விளை​வாக பேஸ்​புக், யூ டியூப் உள்​ளிட்ட 26 சமூக வலைதள கணக்​கு​களை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்​கியது. இதனால் நேபாளம் முழு​வதும் போராட்​டம் தீவிரமடைந்​தது. அந்த நாட்டு நாடாளு​மன்​றம், உச்ச நீதி​மன்​றம், அரசு அலு​வல​கங்​கள், பிரதமர், அதிபர், மூத்த அமைச்​சர்​களின் வீடு​கள் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன.

போ​ராட்​டம் வலு​வடைந்​த​தால் அதிபர் ராம் சந்​திர பவு​டால், பிரதமர் சர்மா ஒலி அடுத்​தடுத்து பதவி வில​கினர். நாட்​டின் பாது​காப்பை ராணுவம் ஏற்று, நேபாளம் முழு​வதும் ஊரடங்கை அமல்​படுத்​தி​யது. இந்தப் போராட்டத்தில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர். போராட்டங்களின்போது கிட்டத்தட்ட 1,700 பேர் காயமடைந்தனர். அவர்களில் சுமார் 1,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தப் போராட்டத்தால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.