Flipkart and Amazon Smartphone Sale: பண்டிகைகளின் சிறப்பு நாட்களில், சந்தையில் மட்டுமல்லாமல், டிஜிட்டல் சந்தையிலும் பல பிரம்மாண்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தவகையில் இப்போது பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) நிறுவனங்கள் தங்கள் விற்பனையை அறிவித்துள்ளன, இந்த செய்தி வெளியான முதல் சாமானிய மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். ஏனெனில் இந்த விற்பனையில் பல பொருட்களில் சலுகைகளும், தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், ஒருபுறம் இந்த பண்டிகை ஒப்பந்தங்களில் பல சேமிப்பு சலுகைகளின் பலனைப் பெற்றாலும், தவறான அல்லது போலியான பொருட்களைப் பெறுவதற்கான அபாயமும் இந்த நேரத்தில் கணிசமாக இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்ஃபோன் ஒரிஜினலா அல்லது போலியா என்பதை எப்படி அறிவது?
ஊடக அறிக்கைகளின்படி, பயனர்கள் பலர் ஆன்லைன் ஷாப்பிங்கில் இதுபோன்ற போலி சாதனங்களைக் கண்டறிந்துள்ளனர், அவை டெலிவரிக்குப் பிறகு சிறிது காலம் கழித்து வேலை செய்வதை நிறுத்திவிடுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் ஏதேனும் விற்பனையிலிருந்து ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்யப் போகிறீர்கள் என்றால், இந்த செய்தி படிக்கவும், உங்களுக்கு கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் பெற்ற ஸ்மார்ட்போன் ஒரிஜினலா அல்லது போலியானதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.
சஞ்சார் சாத்தி போர்டல் (Sanchar Saathi Portal):
உண்மையில், அனைவரின் மொபைலிலும் 15 இலக்கு கொண்ட IMEI (சர்வதேச மொபைல் உபகரண அடையாளம்) தனித்துவமான எண் இருக்கக்கூடும். அதே நேரத்தில், ஆன்லைனில் வாங்கிய தொலைபேசி டெலிவரி செய்யப்பட்ட பிறகு, உங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் போலியானதா அல்லது உண்மையானதா என்பதைக் கண்டுபிடிப்பது இப்போது ஒரு பெரிய பணியாகும். இதற்காக, நீங்கள் அரசாங்க வலைத்தளமான சஞ்சார் சாதி போர்ட்டலைப் (Sanchar Saathi Portal) பயன்படுத்தலாம்.
1. உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் ஒரிஜினலா மற்றும் போலியானதா என்பதை அடையாளம் காண, முதலில் நீங்கள் சஞ்சார் சாதியின் அதிகாரப்பூர்வ தளமான https://sancharsaathi.gov.in ஐப் பார்வையிட வேண்டும்.
2. இப்போது தளத்தில், முகப்புப் பக்கத்தில் Situation Centric Service என்ற விருப்பத்தைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்யவும்.
3. பின்னர் நீங்கள் இங்கே Know Your Mobile / IMEI Verification என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. இதற்குப் பிறகு நீங்கள் கேப்ட்சா மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
5. இப்போது உங்கள் மொபைல் எண்ணில் ஒரு OTP வரும், அதை சமர்ப்பிக்க வேண்டும்.
6. OTP ஐ நிரப்பிய பிறகு, ஸ்மார்ட்போனின் 15 இலக்க IMEI எண்ணை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
முழு விவரங்களையும் பெறலாம்
இந்த விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பிறகு, உங்கள் சாதனம் தொடர்பான அனைத்து விவரங்களும் உங்கள் தொலைபேசித் திரையில் தோன்றும், அதாவது பேண்ட் பெயர், சாதன நிலை, மாடல், சாதன வகை மற்றும் உற்பத்தி விவரங்கள் அனைத்தையும் பெறுவீர்கள். இதன் அடிப்படையில், உங்கள் சாதனம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் அடையாளம் கண்டுக் கொள்ளலாம்.
About the Author
Vijaya Lakshmi