வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம்: நில அளவை துறை உதவி வரைவாளர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் வைகை ஆற்​றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மனுக்​கள் மிதந்​தன. இதுகுறித்து சிவகங்கை கோட்​டாட்​சி​யர் விஜயகு​மார் விசா​ரணை நடத்​தி​னார். அதனடிப்​படை​யில், திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் விஜயகு​மார் இடமாற்​றம் செய்​யப்​பட்​டார். மேலும், அலட்​சி​ய​மாகப் பணிபுரிந்த 7 அலு​வலர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது.

முன்னதாக, திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் நில அளவைப் பிரி​வில் பராமரிக்​கப்​பட்டு வந்த 13 பட்டா மாறு​தல் தொடர்​பான மனுக்​களை மர்ம நபர்​கள் திருடிச் சென்​ற​தாக, வட்​டாட்​சி​யர் விஜயகு​மார் புகார் அளித்​திருந்தார். அதன்​பேரில், திருப்​புவனம் போலீ​ஸார் வழக்​குப்பதிந்​தனர். வட்​டாட்​சியர்அலு​வல​கத்​தில் சிசிடிவி கேம​ராக்​கள் இல்​லாத​தால், மனுக்​களை திருடிய நபரைக் கண்​டறிவ​தில் தாமதம் ஏற்​பட்​டது.

இதனிடையே, திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வலக நில அளவைப் பிரி​வில் பணிபுரி​யும் முது​நிலை வரை​வாளர் சரவணனுக்கு 17 ‘பி’-ன் கீழ் நடவடிக்கை எடுக்​க​வும், அவுட்​சோர்​சிங்​கில் பணிபுரி​யும் புல உதவி​யாளர் அழகுப்​பாண்​டியை பணிநீக்​கம் செய்​ய​வும், நில அளவைத் துறை உதவி இயக்​குநருக்கு மாவட்ட ஆட்​சி​யர் அறி​வுறுத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது.

இதற்​கு, தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றி​யம், நில அளவை அலு​வலர்​கள் ஒன்​றிப்பு சங்​கத்​தினர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் நில அளவைப் பிரி​வில் பணிபுரி​யும் உதவி வரை​வாளர் முத்​துக்​குமரனை (42) போலீ​ஸார் பிடித்து விசா​ரித்​தனர். நில அளவை அலு​வலர்​கள் ஒன்​றிப்பு சங்​கத்​தினர், முறை​யான ஆதா​ரம் இல்​லாமல் கைது செய்​யக் கூடாது என எதிர்ப்பு தெரி​வித்​தனர். எனினும், வைகை ஆற்​றுப் பாலத்​தில் முத்​துக்​குமரன் சென்று வந்​தது அங்​குள்ள சிசிடிவி காட்​சிகளில் பதி​வான​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

அதே​நேரத்​தில், மனுக்​கள் கொண்டு வந்​ததற்​கோ, ஆற்​றில் வீசி​யதற்கோஆதா​ரம் இருந்​தால் மட்​டுமே கைது செய்ய வேண்​டுமென சங்​கத்​தினர் வலி​யுறுத்​தினர். இதையடுத்​து, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் சிவபிர​சாத், கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் பிரான்​சிஸ், டிஎஸ்பி பார்த்​திபன், ஆய்​வாளர் முத்​துக்​கு​மார் ஆகியோர் நேற்று முழு​வதும் விசா​ரணை நடத்​தினர். பின்​னர், வைகை ஆற்​றுப் பாலத்​துக்​குச் சென்று வந்​ததற்கு முறை​யாக காரணம் கூற​வில்லை என்று கூறி முத்​துக்​குமரனை நேற்​று இரவு கைது செய்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.