Flipkart Big Billion Days Sale 2025: சேலுக்கு முன்னரே ஸ்மார்ட் டிவி-களில் அதிரடி தள்ளுபடிகள்

Flipkart Big Billion Days Sale 2025: செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்க உள்ளது. அதிகாரப்பூர்வ விற்பனை தொடங்குவதற்கு முன்பே, ஸ்மார்ட் டிவி பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகைகள் கிடைத்துள்ளன. குறிப்பாக 43 மற்றும் 55 இன்ச் LED ஸ்மார்ட் டிவிகள் இந்த முறை மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கும். Philips, TCL, Xiaomi, Thomson மற்றும் Foxskyபோன்ற பிரபலமான பிராண்டுகளின் டிவிகளை இப்போது மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். ஃபிளிப்கார்ட் சேலில் ஸ்மார்ட் டிவி -களில் கிடைக்கவுள்ள தள்ளுபடி சலுகை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Philips Frameless Smart TV: மலிவு விலையில் ஸ்டைலான டிவி

வீட்டிற்கு மெலிதான மற்றும் ஸ்டைலான டிவியை வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்கள், பிலிப்ஸின் 55-இன்ச் பிரேம்லெஸ் ஸ்மார்ட் டிவியை வாங்கலாம். இதன் அசல் விலை ரூ.49,999, ஆனால் தற்போது இந்த சேலில் இந்த ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.34,999க்கு கிடைக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்கள் இதில் 30% நேரடி தள்ளுபடி பெறலாம். இது முழு HD டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு டிவி தளத்துடன் வருகிறது. இதன் பிரேம்லெஸ் வடிவமைப்பு உங்கள் ஹாலுக்கு பிரீமியம் தோற்றத்தைக் கொடுக்கும்.

TCL iFFALCON Smart TV- 4K: தரமான டிவி

4K டிவி வாங்க வேண்டும் என்று கனவுடன் உள்ளவர்களுக்கு இந்த டிவி ஏற்றது. TCL iFFALCON 43 அங்குல ஸ்மார்ட் டிவி தற்போது ரூ.22,999க்கு கிடைக்கிறது. அதன் அறிமுக விலை ரூ.50,999. அதாவது, 54% சேமிப்பு கிடைக்கிறது. இது கூகிள் டிவி தளத்தில் இயங்குகிறது, இது உங்களுக்கு மென்மையான பயனர் அனுபவத்தையும் அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் செயலிகளின் எளிதான அணுகலையும் வழங்குகிறது.

Xiaomi F Series Smart TV: Alexa மற்றும் Fire டிவியை அனுபவிக்கலாம்

இந்த விற்பனையில் Xiaomiயின் F தொடர் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.21,999 ஆகக் குறைந்துள்ளது. இது முன்பு ரூ.42,999 ஆக இருந்தது. அதாவது, 48% தள்ளுபடி. கிடைக்கிறது இது ஒரு Fire TV தளத்தைக் கொண்டுள்ளது. இதில் Alexa ஆதரவும் கிடைக்கிறது. இதன் மூலம், நீங்கள் குரல் கட்டளைகள் மூலம் டிவியைக் கட்டுப்படுத்தலாம். இதில் பல ஸ்ட்ரீமிங் செயலிகள் மற்றும் பெரிய உள்ளடக்க நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thomson Smart TV: சக்திவாய்ந்த ஒலி மற்றும் பரிமாற்ற சலுகை

தாம்சனின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை இப்போது வெறும் ரூ.17,999க்கு வாங்கலாம். இதில், உங்களுக்கு 47% தள்ளுபடி மற்றும் 40W இன் சக்திவாய்ந்த ஒலி வெளியீடு கிடைக்கிறது. இது உங்கள் வீட்டை ஒரு மினி தியேட்டராக மாற்றும். இது தவிர, இந்த மாடலில் ரூ.5,400 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் நிறுவனம் வழங்குகிறது. இது இந்த டீலை இன்னும் பயனுள்ளதாக்குகிறது.

Foxsky Smart TV: பட்ஜெட்டுக்கு ஏற்ற டிவி

குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பினால், ஃபாக்ஸ்ஸ்கியின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி இந்த விற்பனையின் சிறப்பம்சமாகும். இதன் விலை ரூ.12,499 மட்டுமே. அதன் உண்மையான விலை ரூ.41,499 ஆகும். அதாவது, உங்களுக்கு 69% வரை தள்ளுபடி கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு டிவி தளத்தில் இயங்குகிறது மற்றும் 1 வருட உத்தரவாதத்துடன் வருகிறது. இது பட்ஜெட் பிரிவில் சிறந்த தேர்வாக இருக்கும்.

Flipkart Big Billion Days Sale 2025: அனைவரது பட்ஜெட்டிற்கும் ஏற்ற சலுகைகள்

ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 -க்கு முன் 43 மற்றும் 55 அங்குல ஸ்மார்ட் டிவிகளுக்கான இந்த சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் சலுகையாகும். நீங்கள் பிரீமியம் வடிவமைப்பு மற்றும் 4K தரத்தை விரும்பினாலும் அல்லது பட்ஜெட்டுக்கு ஏற்ற டிவி-யைத் தேடினாலும், அனைவருக்கும் அவரவர் எண்ணத்திற்கு ஏற்ற ஸ்மார்ட் டிவி இங்கு கிடைக்கும்.

About the Author


Sripriya Sambathkumar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.